
நேட்டா இராணுவ அமைப்பில் இணையவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 ஆம் தேதி போர் தொடுத்தது. கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து போர் தாக்குதல் நடந்து வரும் நிலையில், ரஷ்யா- உக்ரைன் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக நடைபெற்ற மூன்று கட்ட் பேச்சுவாரத்தையும் தோல்வியையே தழுவியுள்ளது.மேலும் போர் காரணமாக, உக்ரைனின் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துள்ளது.
இதையும் படிக்க: Russia Ukraine War: நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா.. என் நாட்டில் இது நடக்காது.. உக்ரைன் அதிபர் உருக்கம்..
உக்ரைனின் முக்கிய நகரங்களை தொடர்ந்து தாக்கு வரும் ரஷ்ய படை, செர்னோபில் அணுமின் நிலையத்தை கைப்பற்றியது. கீவ், கார்கீவ், கேர்சன், மரியுபோல் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய இராணுவம் சுற்றி வளைத்து தாக்குதலை நடத்தி வருகின்றன.இந்தத் தாக்குதலில் உக்ரைனின் சுகாதார ஆய்வகங்கள் ஏதாவது தாக்கப்பட்டால், அங்கிருந்து அச்சுறுத்தலான நோய்களைப் பரப்பும் கிருமிகள் வெளியேறுவதற்கு வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைனின் சுகாதார ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய்க் கிருமிகளை அழித்து விடுமாறு அந்நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Russia-Ukraine War: 200 வகை பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை: அமெரிக்காவை அலறவிட்ட ரஷ்யா
உக்ரைன் அரசு விலங்குள் மற்றும் மனிதன் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தான கிருமிகளை கட்டுப்படுத்துவது மற்றும் தடுப்பது குறித்து, அமொரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பு, மற்றும் உலக சுகாதார நிறுவனங்களின் நிதியுதவியுடன் தங்கள் நாட்டின் ஆய்வகங்களில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றது.இதனிடையே உலக சுகாதார நிறுவனம், உக்ரைன் சுகாதார அமைச்சகத்திற்கும், அது தொடர்புடை நிறுவனங்களுக்கும், உக்ரைன் ஆய்வகங்களில் உள்ள ஆபத்தான நோய் பரப்பும் கிருமிகளை அழித்து விடும் படி பரிந்துரைந்துள்ளது. ஆனால் இதுக்குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. உக்ரைனில் உயிரி ஆயுதத் திட்டத்திற்கு அமெரிக்கா நிதியுதவி அளித்திருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பாதாகக் ரஷ்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:Ukraine-Russia War: உக்ரைன் மகப்பேறு மருத்துவமனை மீது தாக்குதல்... ரஷ்யா அக்கிரமம்!!
மேலும் உக்ரைன் மீதான போரில் ரஷ்யா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன் தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.உக்ரைனில் ரசாயன ஆயுதங்கள் அல்லது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ரஷ்யாவின் திட்டங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் ரஷ்யா மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதை பார்த்தாலே போதும் என்று காட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கு பதலளிக்கும் விதமாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அமைதியான ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இன்னும் வேறு என்னெல்லாம் தயார் செய்துள்ளீர்கள்? ரசாயன ஆயுதங்களால் எங்கு தாக்குகிறார்கள்? என்று கூறுங்கள் என்று கேள்விகளை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எழுப்பியுள்ளார்.