ஈவு இரக்கமில்லாத அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..!! WHO நிதியை நிறுத்தியதால் எகிறி அடித்த பில்கேட்ஸ்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 15, 2020, 5:22 PM IST
Highlights

உலகில்  வேறு எந்த நிறுவனத்தாலும் செய்யமுடியாது.  உலகம் தற்போது இருக்கும் நிலையில் முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது உலகச் சுகாதார நிறுவனத்தில் தேவை அதிகமாகி உள்ளது 

உலகச் சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிய நிதியை அமெரிக்கா நிறுத்தி இருப்பது  ஆபத்தான முடிவு என்ன உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார் .  அதிபர் ட்ரம்பின்  முடிவு  வைரசால் உலகம் சந்திக்கும் பிரச்சனையை மேலும் அதிகப்படுத்தும் எனவும் அவர்  கூறியுள்ளார்,  அமெரிக்கா இந்த முடிவை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர் ,  அதாவது உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிய நிதியை நிறுத்தப்போவதாக அமெரிக்க அதிபர் ஏற்கனவே எச்சரித்திருந்தார் ,  உலகச் சுகாதார நிறுவனம் சரியாக செயல்படுவதில்லை என்றும் அது சீனாவுக்கு சாதகமாக செயல்படுகிறது என்றும்,   டொனால்ட் ட்ரம்ப் குற்றம்சாட்டியிருந்தார் ,  சீனாவில் கொரோனா  வைரஸ் பரவியதை ஆரம்ப கட்டத்திலையே அறிந்து உலக நாடுகளை எச்சரிக்க  உலக சுகாதார நிறுவனம் தவறிவிட்டது எ அவர் குற்றம் சாட்டியுள்ளார் .

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிவரும் நிதியை  நிறுத்தப்போவதாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார் ,  இந்நிலையில்  வெள்ளை மாளிகையில் அமெரிக்க உயர் அதிகாரிகளின் மத்தியில் இன்று உரையாற்றிய அவர் , ஏற்கனவே தாம் அறிவித்தது போல உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அறிவித்தார் .  இதனால் பல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன ,   அமெரிக்காவின் இந்த முடிவால் உலகச் சுகாதார நிறுவனம்  கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் இதுவரை அந்த நிறுவனம் கருத்து ஏதும் கூற வில்லை.  ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  ஐநா சபையின்  பொதுச் செயலாளர அந்தோனி குட்ரஸ் , அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின்  முடிவு மிகவும் தவறானது , நிதியை நிறுத்துவதற்கு சரியான நேரம் இதுவல்ல.  இதனால் சுகாதார உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் பல ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.  

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுகாதார நிறுவனங்களும் அதிபர் ட்ரம்ப்  இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்,  இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக பணக்காரர்களில்   ஒருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனருமான பில்கேட்ஸ் , " உலகமே சுகாதாரப்பிரச்சினைகளில்  சிக்கியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை  நிறுத்துவது மிகவும் ஆபத்தான முடிவு , கொரோனா வைரஸ் பரவலை உலக சுகாதார நிறுவனம் வெகுவாக குறைத்து வரும் நிலையில் அவர்களுக்கு கிடைக்கப்படும் நிதி தடைபட்டால் அது அவர்களின் வேகத்தை மட்டுப்படுத்தும் ,  எனவே கொரோனா  வைரஸ் தொற்று  மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது ,  உலக சுகாதார நிறுவனம் ஆற்றிவரும் பணியை உலகில்  வேறு எந்த நிறுவனத்தாலும் செய்யமுடியாது.  உலகம் தற்போது இருக்கும் நிலையில் முன்பு இருந்ததைக் காட்டிலும் தற்போது உலகச் சுகாதார நிறுவனத்தில் தேவை அதிகமாகி உள்ளது என அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா உலக சுகாதார நிறுவனத்திற்கு 3000 கேடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியிருந்த து குறிப்பிடதக்கது 
 

click me!