இந்த ஓட்டலின் வயது 1300 ஆண்டுகள்... ஜப்பானில் ஓர் அதிசயம்!

By Asianet Tamil  |  First Published Jan 28, 2019, 5:23 PM IST

ஓட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை. தெருவுக்குத் தெரு வகை வகையான ஓட்டல்கள் புற்றீசல் போல் பெருகியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரே ஒரு ஓட்டல் இன்னும் அதே புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் ஜப்பான் நாட்டில் உள்ளது.


ஓட்டல்கள் இல்லாத நாடுகளே இல்லை. தெருவுக்குத் தெரு வகை வகையான ஓட்டல்கள் புற்றீசல் போல் பெருகியிருக்கிறது. பல நூற்றாண்டுகளாக ஒரே ஒரு ஓட்டல் இன்னும் அதே புதுப் பொலிவுடன் இயங்கி வருகிறது. இந்த ஓட்டல் ஜப்பான் நாட்டில் உள்ளது.

அந்நாட்டு ஹோன்ஷு தீவில் இஷிகாவா என்ற இடத்தில் உள்ளது 46 தலைமுறை கண்ட இந்த ஓட்டல். ஹோஷி என்பவரால் இந்த ஓட்டல் தொடங்கப்பட்டது. இதற்கு ‘ரயோகன்’ என்று பெயரிடப்பட்டது. இந்த ஓட்டல் கட்டி எவ்வளவு ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சொன்னால் நம்ப மாட்டீர்கள்! சுமார் 1300 ஆண்டுகள் ஆகிவிட்டன. கி.பி. 718-ல் இந்த ஓட்டல் கட்டப்பட்டது. 

Latest Videos

ஹோஷிக்குப் பின் அவரது வாரிசுகள் வாழையடி வாழையாக ஓட்டலை நிர்வகித்து வருகின்றனர். தற்போது ஓட்டலை நிர்வகித்து வருவது 46வது தலைமுறை! 100 அறைகள் கொண்ட இந்த ஓட்டலில் 450 பேர் தங்க முடியும். காலத்துக்கு ஏற்ப பல நவீன வசதிகளும் ஓட்டலில் புகுத்தப்பட்டுள்ளன. இப்படி பல சிறப்புகளைப் பெற்றுள்ள ரயோகன் ஓட்டல், மிகப் பழமையான ஓட்டல் என்று கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.

 

இந்த ஓட்டலின் சிறப்பம்சமே ஜப்பான் நாட்டு உணவு வகைகளை கொஞ்சமும் பழமை மாறாமல் அதே பாரம்பரியத்துடன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதுதான். ஓட்டல் கட்டிய புதிதில் ஜப்பான் நாட்டு பருவநிலைக்கு ஏற்ப அந்தந்த பருவத்தின் பெயர்களை ஓட்டல் அறைகளுக்கு பெயராகச் சூட்டினார் ஹோஷி. இது இன்றும் அப்படியே தொடர்கிறது!

click me!