சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது.
சிறையில் உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் உடனே கைது செய்யப்பட்டு லாகூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் லாகூர் சிறையில் இருக்கும் நவாஸுக்கு இதய கோளாறு உள்ளது. செவ்வாய்க் கிழமை, அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் திடீரென நேற்று நவாஸின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உடனே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருவதால் பாகிஸ்தானில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.