கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய நர்ஸ்…. ஆஸ்பத்திரியில் நடந்த கொடுமை !!

By Selvanayagam P  |  First Published Jan 25, 2019, 7:23 AM IST

அமெரிக்க மருத்துவமனை ஒன்றில் 14 ஆண்டுகளாக் கோமா நிலையில் இருந்த பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிள ஆண் நர்சை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


 


அமெரிக்காவின் அரிசோனா மாகாணம் பீனிக்ஸ் நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 29 வயதான பெண் ஒருவர் கடந்த 14 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அந்த பெண் கர்ப்பம் தரித்தார். கடந்த மாதம் 29-ந் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. 14 ஆண்டுகளாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Latest Videos

அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்தது. எனவே அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

உண்மையை கண்டறிவதற்காக மருத்துவமனையில் பணியாற்றும் அனைத்து ஆண்களும் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அந்த மருத்துவமனையில் ஆண் நர்சாக பணியாற்றும் நாதன் சுதர்லாந்த் என்பவர் தான், கோமாவில் இருந்த பெண்ணை கற்பழித்து கர்ப்பமாக்கினார் என்பது டி.என்.ஏ. பரிசோதனை மூலம் தெரியவந்தது. இதையடுத்து பீனிக்ஸ் நகர போலீசார் அவரை கைது செய்தனர். 

click me!