மீண்டும் ஆபத்தில் சிக்கிய ஐரோப்பிய நாடுகள்..!! தலையில் அடித்துக் கதறும் WHO..!!

By Ezhilarasan Babu  |  First Published May 1, 2020, 1:53 PM IST

ஊரடங்கு தளர்த்துவதன் மூலம் மக்கள் கூட்டமாக திரளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , ஐரோப்பாவில் உள்ள  நான்கில் மூன்று பங்கு நாடுகளில்  வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் , 


ஐரோப்பிய நாடுகள் மீண்டும் மிக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது,  குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மிக வேகமாக ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில் இந்த  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது  உலக அளவில் சுமார் 30 லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .  உலக அளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரத்தை தாண்டியுள்ளது.   கிட்டத்தட்ட 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் இருந்து சிகிச்சை பெற்றுக் மீண்டுள்ளனர்.   சீனாவிலிருந்து உலகம் முழுதும் பரவியுள்ள இந்த வைரஸால் மற்ற நாடுகளை விட ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில்  முதல் 5 இடங்களை பிடித்துள்ளன . 

Latest Videos

இதுவரை ஸ்பெயினில் 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் அங்கே 24 ஆயிரத்து 543 பேர் உயிரிழந்துள்ளனர் . அதேபோல் இத்தாலியில் 2 லட்சத்து 5 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,  சுமார் 28,000 பேர் உயிரிழந்துள்ளனர் , பிரான்சில் ஒரு லட்சத்து 67 ஆயிரம் பேருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டதில் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் ஜெர்மனியில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சுமார் 6600 பேர் உயிரிழந்துள்ளனர் .  அமெரிக்காவில் கொரோனா தீவிரமாவதற்கு முன்பாகவே ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ஐரோப்பிய நாடுகளில் காய்ச்சல்  உச்சக்கட்டத்தில் இருந்தது .  கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நோய்த்தாக்கம் உச்ச நிலையில் இருந்த நிலையில்  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அதன் பாதிப்பை படிப்படியாகக் குறைந்தது .  இதனால் நோய்த்தாக்கம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்கு வந்தது என அறிவித்த அந்த  நாடுகள் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாக  அறிவித்தன. 

இந்நிலையில் ஜெர்மனி சில தினங்களுக்கு முன்னர் கட்டுப்பாட்டை தளர்த்திய நிலையில் அங்கு நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது .  இதனையடுத்து இங்கிலாந்து துருக்கி உள்ளிட்ட நாடுகளும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருகின்றன.  முன்னதாக ஸ்பெயின் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளும் தங்களது நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன , இதனால் மீண்டும் அந்நாடுகளில் புதிய நோய்த் தொற்றுகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில்  உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிரிவு தலைவர்  டாக்டர் ஹான்ஸ் குலூக் , ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார் .  ஐரோப்பிய நாடுகள் மிக வேகமாக தடைகளை தளர்த்தி வருவதன் மூலம் அங்கே புதிய தொற்றுகள்  உருவாகும் சூழல் அதிகரித்துள்ளது .  ஐரோப்பிய மண்டலத்தில் உள்ள 44 நாடுகளில் 21 நாடுகள் ஏற்கனவே கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளன ,  இன்னும் 11 நாடுகள் அடுத்த சில தினங்களில் கட்டுப்பாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளன, 

ஊரடங்கு தளர்த்துவதன் மூலம் மக்கள் கூட்டமாக திரளும் சூழல் ஏற்பட்டுள்ளதால் , ஐரோப்பாவில் உள்ள  நான்கில் மூன்று பங்கு நாடுகளில் வைரஸ் மீண்டும் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார் ,   முன்னதாக தங்கள் நாட்டில் வைரஸ் மீண்டும் பரவுவதை அறிந்த ஜெர்மன் மீண்டும்  ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறது .  ஊரடங்கை தளர்த்துவதில் சர்வதேச நாடுகள் அவசரம் காட்டக்கூடாது என உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில்  மீண்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

click me!