சீனாதான் குற்றவாளி, வெள்ளை மாளிகையில் கொதித்த அதிபர்..!! உளவுத்துறை சொல்லியும் கேட்காமல் உளறிக் கொட்டிய ட்ரம்ப

By Ezhilarasan Babu  |  First Published May 1, 2020, 1:03 PM IST

 சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததா என்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு , ஆமாம் அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது .  ஆனால் அதை தற்போது உங்களிடத்தில் நான் சொல்ல முடியாது ,  


உலகச் சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என அமெரிக்க அதிபர் டொன்லாட் டிரம்ப்  மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் ,  சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்துதான் கொரோனா வைரஸ் தோன்றியது என அவர் குற்றம் சாட்டி வந்த நிலையில் உலக சுகாதார அமைப்பை அவர் இவ்வாறு மோசமாக விமர்சித்துள்ளார் .  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது ,  இதில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கொரோனாவால்  அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது .  இதுவரை அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது .  இதனால் ,  தன் கோபத்தையும் இயலாமையையும்  ட்ரம்ப் சீனாவின் மீது வெளிப்படுத்தி வருகிறார் .

Latest Videos

உலகத்தில் ஏற்பட்டுள்ள  மோசமான பாதிப்புகளுக்கு சீனா தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டி வருகிறார் , இந்த வைரஸ் தோன்றியபோதே எச்சரித்திருந்தால் உலகம் இந்த பேரழிவில் இருந்து தப்பித்து இருக்கும் ,  ஆனால் சீனா இந்த வைரஸ் குறித்த தகவலை ஆரம்பத்தில்  உலகிற்கு எச்சரிக்க மறுத்துவிட்டது .  அதுமட்டுமல்ல இதை முன்கூட்டியே அறிந்து உலகநாடுகளுக்கு எச்சரிக்க  வேண்டிய உலக சுகாதார நிறுவனமும் தன் பணியில் இருந்து தவறி விட்டது ,  சீனாவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்த வைரஸ் பற்றிய தகவலை உலக சுகாதார அமைப்பு மறைத்துவிட்டது என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்  மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் சீனா மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.   இந்நிலையில் அமெரிக்க ஆராய்ச்சி வல்லுனர்களை சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வு கூடத்தில் ஆய்வு நடத்த  அனுமதிக்க வேண்டுமென அமெரிக்கா சீனாவுக்கு கோரிக்கை விடுத்தது

 

ஆனால் சீன அதை ஏற்க மறுத்ததை அடுத்து , தற்போது  அமெரிக்க உளவு அமைப்புகளுக்கு  சீனா வைரஸ் ஆய்வு கூடம் குறித்து விசாரணை நடத்த ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் . இதனையடுத்த அமெரிக்க உளவு அமைப்புகள் கொடுத்த அறிக்கையில் , இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டதாக தெரியவில்லை,  ஆய்வு கூடத்தில் மேம்படுத்தப்பட்டதும் இல்லை ,   ஆனாலும் இந்த வைரஸ் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.   இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ட்ரம்ப்,  உலக சுகாதார நிறுவனம் தன்னை நினைத்து வெட்கப்பட வேண்டும் ,  ஏனெனில் அந்த அமைப்பு சீனாவின் மக்கள் தொடர்பு நிறுவனமாக செயல்பட்டு வருகிறது , உலக அளவில் பரவியிருக்கும் இந்தத் தொற்று நோயை நாம் முன்கூட்டியே தடுத்திருக்க முடியும் ஆனால் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரிழப்பை ஏற்படுத்தி வருகிறது .   இதற்கு சீன அதிபர்  ஜீ ஜின்பிங் பொறுப்பேற்க வேண்டும், என தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில்,  சீனாவில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததா என்பதற்கு உங்களிடம் ஆதாரங்கள் ஏதும் உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு , ஆமாம் அதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளது .  ஆனால் அதை தற்போது உங்களிடத்தில் நான் சொல்ல முடியாது ,  தற்போது அதற்கு எனக்கு அனுமதி இல்லை என அவர் தெரிவித்தார் .இதற்கடையில்  உலக சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா ஆண்டுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கி வருகிறது ,  அதே நேரத்தில் சீனா வெரும் 38 மில்லியன் அமெரிக்க டாலர்களை மட்டுமே செலுத்துகிறது இதில் பணம் ஒரு விஷயம் இல்லை நாங்கள் இன்னும் அதிகமாக கூட கொடுப்போம்,   ஆனால்  நாடுகள் தவறு செய்யும்போது அதை முறையாகச் சுட்டிக்காட்ட வேண்டும், மாற்றாக சாக்கு போக்குகளை  சொல்லக்கூடாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ உலக சுகாதார நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். 
 

click me!