
கொரோனா வைரசுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் போலியோ ஒழிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் இந்நிலையில் கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய நிர்பந்தத்தில் உலக நாடுகள் சிக்கி தவித்து வருகின்றன. இந்த கொடிய வைரசை கட்டுப்படுத்துவதே பல நாடுகளுக்கு பெரும் சவாலாக உள்ளது , எனவே போலியோ ஒழிப்பு நடவடிக்கையில் பெருமளவில் ஈடுபட முடியாத நிலை உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .
தேசிய அளவிலான தடுப்பூசி பிரச்சாரங்கள் , மற்றும் வீடு வீடாக சென்று நடத்தப்படும் போலீயோ ஒழிப்பு பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டிய கட்டாயம் எற்பட்டுள்ளதாக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது . இந்நிலையில் உலகப் போலியோ மேற்பார்வை வாரியமும் உலக சுகாதார நிறுவனம் இணைந்து கடந்த வாரம் நடத்திய ஆலோசனையில் இது தொடர்பாக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது . போலீயோ தடுப்பு பணிகள் தடைபட்டால் அதனால் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலீயோ தாக்க வாய்ப்புள்ளதாக அதில் கலந்து கொண்ட பல உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். இதன் மூலம் பக்கவாத நோயினால் பாதிக்கப்படும் சூழல் அதிகரிக்கும் என்றும் அக்கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலகளவில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் சுமார் 97 சதவீதம் பேருக்கு போலியோ தடுப்பு மருந்துகள் வழங்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அதில் வாவாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடந்த 1988 ஆம் ஆண்டு போலியோவுக்கு எதிராக தொடங்கப்பட்ட போலீயோ தடுப்பு இயக்கத்தின் மூலம் 2000ம் ஆண்டு நோய் முற்றிலுமாக தடுக்கப்பட்டது . இலையில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் போலியோ தடுப்பு நடவடிக்கைகள் கைவிடப்படும் நிலை உருவாகியுள்ளது ஆனாலும் இந்த நெருக்கடியான நிலையில் போலியோ தடுப்பூசி போடுவது குறித்து அந்தந்த நாடுகள் தனிப்பட்ட முறையில் தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .