விரைவில் கொரோனாவின் கதை முடிகிறது...!! அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்... எப்படி தெரியுமா..??

By Ezhilarasan BabuFirst Published Apr 3, 2020, 12:40 PM IST
Highlights

எலிகளில் நீண்ட நாட்களாக ஆய்வு நடைபெறவில்லை என்றாலும் தடுப்புசி இரண்டு வாரங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக போதுமான ஆன்ட்டிபயாட்டிக்குகளை உருவாகியது என்றும் தெரிவித்துள்ளனர் . 

இன்னும் சில மாதங்களில் கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரும் என அமெரிக்காவைச் சேர்ந்த பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .  இதுநாள் வரை அவர்கள் மேற்கொண்டு வந்த ஆய்வு  தற்போது வெற்றி பெற்றுள்ளதாகவும் விரைவில் முறையான அனுமதி பெற்று மக்களின் பயன்பாட்டிற்கு தடுப்பூசி கொண்டு வரப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .  கடந்த சில மாதங்களாக பீட்டர்ஸ் பர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசன்  விஞ்ஞானிகள் குழு கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,  தாங்கள் தயாரித்துள்ள மருந்து  பெருமளவில் கொரோனா  வைரசை செயல்பாட்டை கட்டுப்படுத்துவதாகவும், அதன் செயல்பாடு அபாரமாக உள்ளதாக தாங்கள் அதை உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளனர். 

அம்மருந்தை எலிகளில் பரிசோதித்தபோது தங்கள் அது வைரஸை வெற்றிகரமாக எதிர்த்ததுடன்  உடலில் போதுமான ஆன்டிபாடிகளை அது உருவாக்கியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .  இதற்கு முன்பாக சார்ஸ் மற்றும் மெர்ஸ் போன்ற வைரஸ்களுக்கு நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்றது என்றும் சார்ச் வைரஸ் கிருமிகளில் நெருங்கிய தொடர்புடைய  இந்த கொரோனா வைரசுக்கு எதிராக தங்கள் மருந்து சரியான முறையில் செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ளார்  பிட்  ஸ்கூல் ஆப் மெடிசின் மற்றும் அறுவை சிகிச்சையியல் துறையில் பேராசிரியராக உள்ள ஆண்ட்ரியா  காம் போட்டோ ,  சார்ஸ் மற்றும் கொரோனாவுக்கு  எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுவதற்கு புரதம் எனப்படும் ஒரு குறிப்பிட்ட பொருள் முக்கியமானது என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டாதாக தெரிவித்துள்ளார். 

 இந்த வைரசை எப்படி எதிர்க்க முடியும் என்பதை இந்த ஆராய்ச்சியின் மூலம்  தாங்கள் தெரிந்து கொண்டதுடன்,  நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரஸ் புரதங்களைப் பயன்படுத்துகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார் .  தற்போது தாங்கள் நடத்திய ஆய்வில் எலிகளில் நீண்ட நாட்களாக ஆய்வு நடைபெறவில்லை என்றாலும் தடுப்புசி இரண்டு வாரங்களுக்குள் கொரோனா வைரஸுக்கு எதிராக போதுமான ஆன்ட்டிபயாட்டிக்குகளை உருவாகியது என்றும் தெரிவித்துள்ளனர் .  தற்போது தங்கள் தயாரித்துள்ள மருந்தை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் விசாரணைக் குழுவுக்கு அனுப்பி உள்ளதாகவும் அடுத்த சில மாதங்களில் அது மனிதர்களின் மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு வந்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரலாமென்று தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

 

click me!