5 மருந்துகள் human clinical trials (மனிதர்களிடம் செய்யப்படும் சோதனை) நிலையில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவதற்கு இதுவரை 41 விதமான பரிசோதனை முறைகளும். அப்படி தொற்று ஏற்பட்டவருக்கான சிகிச்சை அளிக்க இதுவரை 23 வகையான சிகிச்சை முறைகளும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கும் தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து என சுமார் 41 வகையான மருந்துகள் பரிசோதனையில் இருந்து வருவதாகவும் அவற்றில் 5 மருந்துகள் human clinical trials (மனிதர்களிடம் செய்யப்படும் சோதனை) நிலையில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது அதில் ஏராளமான மனித உயிரிழப்புகள் நிகழ்ந்து வருகிறது . இந்த வைரஸில் இருந்து மீளமுடியாமல் ஒட்டு மொத்த உலகமே திணறி வரும் நிலையில் விரைவில் தடுப்பு தடுப்பூசி கண்டுபிடிப்பது மட்டுமே இந்த வைரசில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்ற நோக்கில் உலகில் உள்ள ஒட்டுமொத்த ஆராய்ச்சியாளர்களும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர் . இந்நிலையில் இதுவரை ஒருவருக்கு கொரோனா நோய்கள் ஏற்பட்டு இருக்கிறதா என்பதை முதலில் கண்டறிவதன் மூலம் அந்நோயை சமூகத்திலிருந்து வெகுவாக குறைக்க முடியும் என்ற அடிப்படையில் பல்வேறு நிறுவனங்கள் நோய்களை துல்லியமாகக் கணிக்கக் கூடிய சோதனை முறைகளை ஆராய்ந்து வருகின்றனர் , அந்த வகையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிவதற்கு 41 வகையான சோதனைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர் அந்த சோதனை விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அதற்கு அடுத்த படியாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது , ஏற்கனவே சார்ஸ், மெர்ஸ் போன்ற வைரஸ்களை தடுக்க நடத்தப்பட்ட சிகிச்சை முறைகளும் தற்போது மிகுந்த பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் . அந்தவகையில் நோய்வாய்ப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 23 வகையான சிகிச்சைகள் முறைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தற்போது அவைகள் மனிதர்களிடம் பரிசோதித்து பார்க்கும் நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் விவரங்கள் இதோ
இந்த வைரசிலிருந்து தப்பிக்க ஒரே தீர்வு தடுப்பூசி கண்டுபிடிப்பதே என உலகமே தடுப்பூசி ஆய்வுகளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில் ஏற்கனவே மெர்ஸ் சார்ஸ் போன்ற வைரஸ்களை தடுக்க தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளது, அந்த வகை ஆராய்ச்சியை அடிப்படையாகக்கொண்டு கொரோனாவுக்கான தடுப்பூசி சோதனை வேகமாக நடைபெற்று வருகிறது தற்போது தடுப்பூசி விலங்குகளின் உடலில் பரிசோதிக்கப்பட்டு தற்போது மனிதர்களுக்கு அதை பரிசோதிக்கும் நிலையை எட்டியுள்ளது .
வாஷிங்டனில் நடைபெற்று வரும் சோதனைகள் அனைத்தும் 2020 இலையுதிர் காலத்திற்குள் தன் ஆரம்ப கட்ட சோதனைகளை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 15 வகையான தடுப்பூசி மற்றும் டெஸ்ட் டியூப் சோதனையில் இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது அது எந்தெந்த வகையான தடுப்பூசிகள் என்பதன் விவரம் மேலே உள்ளது.