53,166 உயிர் பலி..! 10 லட்சம் பேர் பாதிப்பு..! உலகை உலுக்கி எடுக்கும் கொடூர கொரோனா..!

By Manikandan S R S  |  First Published Apr 3, 2020, 7:45 AM IST

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,14,747 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,166 ஆக உயர்ந்து இருக்கிறது. 


கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன நாட்டின் மத்திய நகரமான வுகானில் உருவான கொடூர கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் கொரோனா நோய் தற்போது கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் உலகின் மற்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை கொரோனா வைரஸ் உண்டாகி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா என உலகின் 204 நாடுகளில் மெல்ல மெல்ல கால்பதித்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Latest Videos

இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  10,14,747 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53,166 ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து அசுர வேகத்தில் சென்று கொண்டிருப்பதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் திணறி வருகிறது.

கொடூர கொரோனாவின் முடிவு காலம் நெருங்கி விட்டது..! நம்பிக்கை தரும் நோபல் பெரிசு பெற்ற விஞ்ஞானி..!

கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களில் இதுவரை 7 லட்சத்து 38 ஆயிரத்து 623 பேர் மருதுமனைகளில் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 37 ஆயிரத்து 3 பேரின் நிலைமை மிகவும் கவலைகிடமாக உள்ளது. மக்களுக்கு நம்பிக்கை தரும் செய்தியாக கொரோனா பரவியவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 191 பேர் சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!