சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்காவை எகிறியடித்த WHO..!! வாயால் வடைசுட வேண்டாம் என எச்சரிக்கை..!!

By Ezhilarasan Babu  |  First Published May 5, 2020, 11:29 AM IST

சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது என அமெரிக்கா கூறிவருவது ஒரு யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு , ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் அமெரிக்காவிடம் இல்லை 


சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ  குற்றம் சாட்டி வரும் நிலையில் இதுவரையில் அதற்கான ஆதாரங்கள் ஏதும் தங்களுக்கு கிடைக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது .  ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் அவசர தலைவர் மைக் ரியான் இதனை தெரிவித்துள்ளார் , கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே இந்த வைரசுக்கு அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர் ,   அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதுவரை அங்கு 11 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது , உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை கடந்துள்ளது .  அதேபோல் அமெரிக்காவை அடுத்து ஐரோப்பிய நாடுகளான இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன

Latest Videos

இந்நிலையில் மொத்த நாடுகளின் கோபமும் சீனாவின் மீது திரும்பியுள்ளது கொரோனா வைரஸுக்கு காரணம் சீனா தான் சீனாவின் வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து தான் இந்த வைரஸ் கசிந்து இருக்கக்கூடும் என அமெரிக்கா தொடர்ந்து சீனாவின் மீது குற்றம்சாட்டி வருகிறது அதேபோல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ சீனாவின்  ஆய்வுக் கூடத்திலிருந்துதான் இந்த வைரஸ் கசிந்து என்பதற்கான  நிறைய ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது என கூறியுள்ளார் ,  அதேபோல் சீனா மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் எனவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் ஆஸ்திரேலியா ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன ,  அதுமட்டுமின்றி இந்த வைரஸை முன்கூட்டியே சீனா நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் ஆனால் வேண்டுமென்றே உலகத்திற்கு இதை எச்சரிக்கை மறுத்துவிட்டது. 

அதனால்தான் இவ்வளவு பேரழிவை உலகம் சந்தித்து வருகிறது இதற்கு உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது என டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார் ,  இந்நிலையில் இது குறித்து  ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால தலைவர் மைக்கேல் ரியான் சீனாவின் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்துதான் வைரஸ் கசிந்தது என அமெரிக்கா கூறிவருவது ஒரு யூகத்தின் அடிப்படையிலான குற்றச்சாட்டு ,  ஆனால் அதற்கான எந்த ஆதாரங்களும் அமெரிக்காவிடம் இல்லை ,  இதுவரை உலக சுகாதார அமைப்பிடமும் எந்த  ஆதாரத்தையும் இது வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .  ஆனால் அமெரிக்காவிடம் அந்த ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் எதிர்நோக்கி காத்திருக்கிறது எனக் அவர் கூறியுள்ளார் .  இதுவரை ஐநா மற்றும் உலக சுகாதார நிறுவனத்திற்கு கிடைத்த சான்றுகளின் படி கொரோனா வைரஸ் இயற்கையானது அது மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ் அல்ல என தரவுகள் எங்களுக்கு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா வுஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வைரஸ் பரவியது என கூறிவரும் நிலையில் எப்போது அந்த ஆதாரங்களும் சான்றுகளும் வெளியிடப்படும் என்பதை அமெரிக்கா தெரிவிக்க வேண்டும் ,  ஆனால் எந்த தரவுகளும் இன்றி உலக சுகாதார நிறுவனம் வெறும் குற்றச்சாட்டுகள் அடிப்படையில் சீனாவிடம் கேள்வி எழுப்ப  முடியாது அப்படி செய்வது மிக கடினம்  என அவர் தெரிவித்துள்ளார் தற்போது இந்த தொற்று நோயை எதிர்க்க சீன விஞ்ஞானிகள் மிகத் தீவிரமாக உழைத்து வருகின்றனர் இந்த நிலையில் அவர்களிடம் இந்த வைரஸ் தொடர்பாக விசாரிப்பதற்கு அவர்களின் விஞ்ஞான ஒத்துழைப்பை தகர்க்கும் என ரியான் தெரிவித்துள்ளார். 
 

click me!