சீனா-அமெரிக்கா இடையே போர்..?? தயாராக இருக்க ஜி ஜின் பிங்குக்கு வந்த புலனாய்வு அறிக்கை..??

By Ezhilarasan Babu  |  First Published May 5, 2020, 10:13 AM IST

அதே நேரத்தில்  சீனா இந்த விவகாரத்தை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது எனவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது 


கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா அமெரிக்காவுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் ஒரு ஆயுத போருக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது என சீனா புலனாய்வு அமைப்பு அந்த நாட்டை எச்சரித்துள்ளது என ராய்ட்டர்ஸ் நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது ,  சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் பாதுகாப்பும் மேற்கத்திய நாடுகளுக்கு சவாலாக இருப்பதால் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா  முயற்சிப்பதாக அந்த அறிக்கையை தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது ,  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இந்நிலையில் இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு வைரசால் அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவில் மட்டும் சுமார் 11 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை நெருங்கி உள்ளன .  அதுமட்டுமின்றி அமெரிக்கப் பொருளாதாரம் மிகக் கடுமையான வீழ்ச்சியை  சந்தித்துள்ளது, இத்தாலி ஸ்பெயின்  பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . 

Latest Videos

இந்நிலையில் ஒட்டு மொத்த நாடுகளின் கோபமும் சீனா மீது திரும்பியுள்ளது ,  ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் ,  தற்போது கொரோனா வைரசுக்கு சீனா தான் காரணமென அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது .  குறிப்பாக சீனாவின் வுஹான் வைரஸ் ஆய்வுக் கூடத்திலிருந்துதான் வைரஸ் கசிந்திருக்கக்கூடும் என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது .  சீனாவில்  வைரஸ் பரவியபோதே உலகநாடுகளை எச்சரித்திருக்க வேண்டும் ஆனால் அதை திட்டமிட்டு சீனா மறைத்துவிட்டது ,  அதனால்தான் உலகம் இந்த அளவிற்கு மோசமான மனித பேரிழப்பையும் பொருளாதார அழிவையும் சந்தித்திருக்கிறது , சீனாதான்  இதற்கு பதில் சொல்ல வேண்டும் என அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது ,  இந்நிலையில் அமெரிக்காவுக்கு ஆதரவாக ஆஸ்திரேலியாவும் வைரஸ் பரவியதற்கு சீனா தான் காரணம் சீனாவின் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 

ஜெர்மனியும் சீனாவிடம் இழப்பீடு கோரி உள்ளது ,  அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சீனாவை குறிவைத்து கடுமையாக விமர்சித்து வருகின்றன,  அதுமட்டுமின்றி சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி உலகச் சுகாதார நிறுவனத்திற்கு அமெரிக்கா வழங்கி வந்த நிதியை நிறுத்தியுள்ளார் ட்ரம்ப்,  இப்படி ஒட்டுமொத்த நாடுகளும் சீனாவை குறிவைத்து விமர்சனம் செய்து வரும் நிலையில் ,  சீனா மேற்கத்திய நாடுகள் சொல்லும் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்து வருகிறது .  இந்நிலையில் சீனாவின் உயர்மட்ட புலனாய்வு அமைப்பான சிஐசிஐஆர் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன் இணைந்த சிந்தனை குழுவான சீனா இன்ஸ்டியூட் ஆப்   தற்கால சர்வதேச உறவுகள் அமைப்பு , சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்  உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது ,  அதில் 1989 தியனன்மென் சதுக்கத்தின் ஒடுக்குமுறைக்குப் பின்னர் உலகளாவிய சீன எதிர்ப்பு உணர்வு மேலோங்கி உள்ளது , கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னர் சீன விரோத அலை அதிகரித்துள்ளது  இந்த அலை அமெரிக்காவுடன் மோதலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது  என எச்சரிக்கப்பட்டுள்ளது . 

தொற்று நோய்க்கு பின்னர் அமெரிக்க தலைமையிலான சீன எதிர்ப்பு உணர்வு  இரண்டு சக்தி  வாய்ந்த  உலக  நாடுகளுக்கிடையே அதாவது அமெரிக்கா சீனாவுக்கு இடையே ஒரு ஆயுத மோதலுக்கு வழிங்குக்கும் என்றும்,   இரு நாடுகளும் போருக்கு தயாராக வேண்டிய சூழ்நிலையை ஏற்பட்டுள்ளது எனவே சீனா தயாராக இருக்க வேண்டும் என அந்த அறிக்கை எச்சரித்துள்ளது . இந்த அறிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனம் இந்த அறிக்கை தொடர்பாக மேலும் விவரங்களை தங்களால் அறிய முடியவில்லை என கூறியுள்ளது,  இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் இந்த அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் ,  இதுகுறித்து  அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சகமும் கருத்துக்கூற மறுத்துள்ளது ,  அதேபோல் இந்த அறிக்கை தாக்கல் செய்த புலனாய்வு அமைப்பான சிஐசிஐஆர் இதுதொடர்பாக கருத்துக்கூற மறுத்துள்ளது . அதே நேரத்தில்  சீனா இந்த விவகாரத்தை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது எனவும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது .

 

மேலும் அந்த அறிக்கையில் சீனாவின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு வளர்ச்சி மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு சவாலாக அமையும் என அமெரிக்கா கருதுகிறது எனவும்,  எனவே சீனாவை மட்டுப்படுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது எனவும் அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன ,  அதேபோல் ட்ரம்ப் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில் கொரோனா வைரசை  சரியாக கையாளவில்லை என ட்ரம்புக்கு  எதிரான பிரச்சாரம் அமெரிக்காவின் மேலோங்கி உள்ளதால் அவர் சீனாவின் மீது விமர்சனத்தை அதிகரித்து வருகிறார் எனவே  சீனாவை  அச்சுறுத்துவதும் , சீனாவுக்கு எதிராக பதிலடி  கொடுப்பது குறித்தும் அவர் பரிசீலித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .  இந்நிலையில் ஹாங்காங் தைவான் மற்றும்  தென் சீன கடற் பகுதியில்  சீனா நியாயமற்ற வர்த்தகம்  மற்றும் தொழில்நுட்ப நடைமுறைகளை பின்பற்றி வருவதாக அமெரிக்கா சீனா மீது சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது மோதலுக்கான ஆரம்பம் என அந்த அறிக்கை தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது...
 

click me!