ரஷ்யா தடுப்பூசியில் உலக சுகாதாரத்துறை அதிரடி கருத்து..!! குழப்பத்தில் உலக நாடுகள்..!!

By Ezhilarasan Babu  |  First Published Aug 12, 2020, 1:22 PM IST

கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா முதல் தடுப்பூசியை அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன் அது கடுமையான ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது.  


கொரோனா வைரசுக்கு எதிராக ரஷ்யா முதல் தடுப்பூசியை அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் முன் அது கடுமையான ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டியது அவசியம் என உலக சுகாதார அமைப்பு  எச்சரித்துள்ளது.  இது ரஷ்ய தடுப்பூசியின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. 

சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக அளவில் 2 கோடிக்கும் அதிகமானவர்களை பாதித்துள்ளது. இதுவரை 7 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உயிர் கொல்லியான கொரோனா வைரசுக்கு தடுப்பூசி எப்போது வரும் என ஒட்டுமொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  கடந்த ஜூன் மாதம் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ரஷ்யா தீவிரமாக இறங்கியது. ரஷ்யாவில் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள இத்தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்திப் பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அது முழு தடுப்பூசியாக உருவெடுத்துள்ளது.  இதனால் உலகின் முதல் கொரோனா தடுப்பூசி உருவாக்கிய நாடு என்ற பெருமையை ரஷ்யா பெற்றுள்ளது. முதல் கொரோனா தடுப்பூசி மருந்து முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 10,12 ஆகிய தேதிகளுக்குள் தடுப்பூசி பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதேபோன்ற தகவல் வெளியாகியுள்ளது. வரும் அக்டோபர் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இந்த தடுப்பூசிக்கு ரஷ்யா தனது நாட்டு ஒழுங்குமுறை அமைப்பிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. தாங்கள் தடுப்பூசி ஆராய்ச்சியில் முன்னணியில் உள்ளதாக கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாகவே ரஷ்யா சுட்டிக்காட்டியது, இந்நிலையில் தனது  தடுப்பூசி ஆராய்ச்சியில் முழுவதுமாக வெற்றி பெற்று, முதல் தடவையாக உருவாகியுள்ள தடுப்பூசி குறித்து  அதிகாரப்பூர்வமாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள அவர், நாங்கள் கொரோனாவுக்கு எதிரான, மனிதர்களுக்கு பாதுகாப்பான தடுப்பூசியை தயாரித்துள்ளோம். மேலும் எங்கள் நாட்டிலேயே அதை பதிவு செய்துள்ளோம். எனது இரண்டு மகள்களில் ஒருவருக்கு நான் தடுப்பூசி பயன்படுத்தினேன், அதன்பிறகு அவள் நன்றாக இருக்கிறாள். காம்-கோவிட்- வெக் லியோ என அழைக்கப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தின்படி ரஷ்யா சுகாதார அமைச்சகம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இந்த தடுப்பூசி முன்னணி மருத்துவ பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு, வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் அவசரப்படக்கூடாது என பல உல நாடுகள் எச்சரித்துள்ளன. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு,  தடுப்பூசியை பொருத்தவரையில் பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தடுப்பூசி விவகாரத்தில் துவக்கத்தில் இருந்தே ரஷ்ய சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் உலக சுகாராத அமைப்பு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசிக்கு முன் தகுதி சான்று அளிப்பது குறித்து நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. தேவையாக பாதுகாப்பு அம்சங்கள் கடுமையான மதிப்பாய்வு செய்த பின்னரே முன் தகுதி சான்று அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மொத்தத்தில் ரஷ்யாவை தடுப்பூசி விவகாரத்தில் அவரசப்பட வேண்டாம் என்று கூறும் வகையிலேயே சுகாதாரத்துறை அமைப்பின் எச்சரிக்கை அமைந்துள்ளது.  
 

click me!