Inhale Vaccine : ஊசியே இல்லாத தடுப்பூசி! சீனா கண்டுபிடிப்பு!! 

By Dinesh TGFirst Published Sep 6, 2022, 6:58 PM IST
Highlights

உலகில் முதன்முறையாக ஊசியே இல்லாமல் மூக்கின் வழியாக தடுப்பு மருந்து செலுத்தும் கருவி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

கொரோனா வைரஸ் - பாகம் 1, பாகம் 2 என்று வெப்சீரிஸ் பாணியில் உருமாறிய தொற்று பரவி வருகிறது. ஒருபுறம் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அதற்கு ஏற்ற வேகத்தில் நோய்த்தொற்றின் தன்மையும் மாறிக்கொண்டிருக்கிறது. மேலும், இந்தியா உட்பட பல நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையில், சீனாவில் ஊசியே இல்லாமல் கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்புக்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. 
 
சீனாவின் தியான்ஜின் நகரிலுள்ள கேன்சின்கோ பயோலாஜிக்ஸ் என்ற ஆராய்ச்சி நிறுவனம் இந்த புதிய ஊசியில்லா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. Ad5-nCoV தடுப்பூசிக்கு ஏற்ப இது உருவாக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டை கருத்தில் கொண்டு, இந்த ஊசியில்லா முறைக்கு  அந்நாட்டின் தேசிய மருந்து தயாரிப்பு நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இதுகுறித்து கேன்சிங்கோ நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த தடுப்பு மருந்தானது, சுவாசத்தின் மூலம் செயல்படுகிறது. ஊசி மூலம் மருந்து செலுத்தாமல், மூக்கின் வழியாக மருந்தை சுவாசித்தாலே போதுமானது. அது செல்லுலார் நோய்எதிர்ப்பை தூண்டி, கொரோனா வைரஸ்க்கு எதிராக முகோசல் நோய்யெதிர்க்கும் சக்தியை உருவாக்குகிறது’ என்று கூறியுள்ளது. 
 
சீனா, மலேசியா, மெக்ஸிகோ, பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளில் Ad5-nCoV தடுப்பு மருந்துக்கு ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எனவே, மற்ற நாடுகளிலும் ஊசியில்லா முறையில் செலுத்துவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கப்படலாம்.

Hangouts : கூகுளின் பிரபல சேவை முடிவுக்கு வருகிறது! பயனர்கள் அதிர்ச்சி!!

 கொரோன வைரஸ் தொற்று ஏற்படாமல் தடுப்பதில் Ad5-nCoV  மருந்து 66 சதவீதம் திறம்பட செயல்படுகிறது. நோய்த்தொற்றை குணமாக்குவதில் 91 சதவீதம் செயல்படுவதாக செய்திகள் வந்துள்ளன.  Ad5-nCoV தடுப்பு மருந்தைப் போல், பிற தடுப்பு மருந்துகளுக்கும் சுவாச முறையிலான உட்செலுத்தும் கண்டுபிடிப்பை அமல்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!