Taiwan Elephant Rock collapsed : வடக்கு தைவானில் ஒரு புகழ்பெற்ற சுற்றுலா தளமாக, இயற்கை தந்த அலங்காரமாக திகழ்ந்து வந்தது தான் Elephant Trunk Rock என்று அழைக்கப்படும் ஒரு இயற்கையான அமைப்பு.
தைவான் நாட்டில் உள்ள புதிய தைபே நகரில் உள்ள ரூயிஃபாங் மாவட்ட அலுவலகத்தின் அறிவிப்புப்படி, கடந்த டிசம்பர் 16 அன்று மதியம் 2 மணியளவில் அந்த பாறை சரிந்து கடலில் விழுந்தது. கடல் நீர் அரிப்பு மற்றும் இயற்கை வானிலை காரணமாக ஏற்கனவே "Elephant TrunkRockன்" ஒரு பகுதி சிதைந்து குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது முழுமையாக அந்த தும்பிக்கை போன்ற பகுதி நீரில் மூழ்கியுள்ளது.
பல் ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் பன்னாட்டு சுற்றுலா விரும்பிகளால் அதிகம் விரும்பப்பட்ட அந்த பாறை தற்போது கடலில் வீழ்ந்துள்ளது. சிலர் இந்த பாறை மீது ஏற முயற்சித்து, பின் கடலில் விழுந்த நிலையில். கடந்த 2010ம் ஆண்டு முதல் பார்வையாளர்கள், பாறை மீது ஏறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேசிய தைவான் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் துறையின் பேராசிரியரான ஷென் சுவான்-சௌ, தைவானின் அதிகாரப்பூர்வ மத்திய செய்தி நிறுவனத்திடம், கடல் நீர் மற்றும் காற்றினால் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் பாறை இடிந்து விழுவது "இயற்கையானது" என்று கூறினார். பாறையின் மெல்லிய வளைவு வடிவமும் அதை மிகவும் ஆபத்தானதாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.
தைபேயின் வடகிழக்கே பிரபலமான சுற்றுலாப் பகுதியான ஜியுஃபெனில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) தொலைவில், ஷெனாவோ என்றழைக்கப்படும் ஒரு குறுகிய நிலப்பரப்பில் இந்த யானை தும்பிக்கை பாறை அமைந்துள்ளது.