முட்டுச் சந்தில் சி**** கழித்த பெண்கள்.. வீடியோவை ஆபாச தளத்தில் வெளியிட்டு கொடூரம்.. கோர்ட் பயங்கர தீர்ப்பு.

By Ezhilarasan Babu  |  First Published Oct 4, 2021, 11:13 AM IST

பிரான்ஸ் நாட்டின் மகளிர் சமத்துவத்தின் தேசிய தலைவர் சூசன்னா, நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பெண்கள், தாங்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆபாச தளத்தில் இருப்பதைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், 


பெண்கள் சிறுநீர் கழிப்பதை வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட்ட வழக்கில், நீதிபதி கொடுத்துள்ள தீர்ப்பு ஸ்பெயின் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த தீர்ப்பை அந்நாட்டு மகளீர் அமைப்புகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு செர்வோ நகரில்  மருக்சைனா  என்ற உள்ளூர் திருவிழா நடைபெற்றது. அப்போது அங்கு ஏராளமான பெண்கள் திரண்டனர். அவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க போதிய ஏற்பாடு அங்கு செய்யப்படாததினால், அதில் கலந்து கொண்ட ஏராளமான பெண்கள் பக்கத்து தெருவில் சிறுநீர் கழித்தனர். அதை ரகசியமாக பதிவு செய்த சில விஷமிகள் அதை ஆபாச தளங்களில் பதிவேற்றினர். 

Tap to resize

Latest Videos

அதில் சிறுநீர் கழிக்கும் பெண்களின் வீடியோ காட்சிகள் ஆபாச தளங்களில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த ஆண்டு போலீசில் புகார் செய்யப்பட்டது, அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தையும் நாடினார். அதற்கான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பப்லோ முனாஸ் வாஸ்குவேஸ் கொடுத்த தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த வீடியோக்கள் பொதுவெளியில் பதிவு செய்யப்பட்டதை ஒரு குற்றமாக கருத முடியாது என தீர்ப்பளித்தார், மேலும் அது பெண்களின் உரிமைகளை மீறுவதாக இல்லை என்றும் அவர் தனது தீர்ப்பில் கூறினார். அவரின் இந்த தீர்ப்பு பெண்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகுந்த கொந்தளிப்பு ஆளாகியுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் மகளிர் சமத்துவத்தின் தேசிய தலைவர் சூசன்னா, நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இது குறித்து தெரிவித்துள்ள பெண்கள், தாங்கள் சிறுநீர் கழிக்கும் வீடியோ ஆபாச தளத்தில் இருப்பதைக்கண்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், அந்த வீடியோக்களை பார்த்து தாங்க முடியாமல் கதறி அழுததாகவும் தெரிவித்தனர். தற்போது நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர்கள் கூறிவருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மகளிர் அமைச்சர் ஐரீன் மொன்டெரோ பெண்களின் அனுமதியின்றி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து அதை ஆபாச தளங்களில் மற்றவர்களுக்கு பகிர்வது பாலியல் வன்முறைதான் என கூறியுள்ளார். 

லுகோ மாகாண நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து #ஜஸ்டிஸ் மருக்ஸைனா என்ற பெயரில் பெண்கள் மற்றும் சமூக ஊடகங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பெண்களின் உரிமையை மீறும் வீடியோக்களை தயாரிப்பது "தண்டனைக்குரியது" என்று கூறி, பெண்களின் உரிமைக்காக போராடிவரும் அனா கார்சியா இந்த தீர்ப்பு பெண்களின் சுதந்திரத்தை மேலும் பாதிக்கும் என்று அவர் கூறினார். பெண்களை அதிகளவில் ரகசியமாக வீடியோக்களை எடுத்து ஆபாச தளங்களில் பதிவேற்றம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

click me!