பிணத்தை வைத்து வங்கியில் கடன் பெற முயன்ற பிரேசில் நாட்டு பெண்!

By SG BalanFirst Published Apr 17, 2024, 6:26 PM IST
Highlights

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் இறந்துபோன முதியவரின் உடலை வங்கிக்குக் கொண்டுசென்று கடன் பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு வங்கியில் சக்கர நாற்காலியில் இருந்த பிணத்தைக் காட்டி ஏமாற்றி 17,000 பிரேசிலியன் ரியாஸ் (சுமார் ரூ.2.6 லட்சம்) கடன் பெற முயன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். எரிகா டிசோசா என்று அடையாளம் காணப்பட்டுள்ள அந்த பெண்மணி, சில மணிநேரங்களுக்கு முன் காலமான 68 வயதான பாவ்லோ ராபர்ட்டோவின் மருமகள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் தன் கையால் முதியவரின் தலையைப் பிடித்து நிமிர்ந்து பார்க்க வைத்திருப்பது போல வங்கி ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் முதியவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சில மணிநேரங்களுக்கு முன்பே இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.

அதிகாரிகளின் முன் கோப்புகளில் கையெழுத்து பெற முயலும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த மோசடி முயற்சியில் எரிகா மட்டும்தான் ஈடுபட்டிருக்கிறாரா அல்லது வேறு கூட்டாளிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏப்ரல் 19ஆம் தேதி இந்த நகரங்களுக்கு மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இதேபோன்ற மோசடி சம்பவம் கடந்த ஆண்டு அயர்லாந்தில் நடந்துள்ளது. டெக்லான் ஹாக்னி (41) மற்றும் கரேத் கோக்லி (37) ஆகிய இருவர் இறந்த ஒருவரின் உடலை தபால் நிலையத்திற்குக் கொண்டுவந்து அவரது ஓய்வூதியத்தைப் பெற முயன்றபோது, மாட்டிக்கொண்டனர்.

கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட டெக்லானுக்கு இரண்டு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கரேத் கோக்லிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

ஸ்மார்ட் கீ வசதியுடன் யமஹா ஏரோக்ஸ் 155 S புதிய வேரியண்ட் அறிமுகம்! அறிமுக விலை ரூ.1.5 லட்சம்!

click me!