சூரிய ஒளி டயட் என்று கூறி பச்சிளம் குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை..

By Ramya s  |  First Published Apr 17, 2024, 1:16 PM IST

தனது 1 வயது மகனின் இறப்புக்கு காரணமாக இருந்த தந்தை ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவை சேர்ந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர், மாக்சிம் லியுட்டி. தனது 1 மாத மகனின் இறப்புக்கு காரணமாக இருந்ததற்காக 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். காஸ்மோஸ் என்ற தனது குழந்தையை சூரிய ஒளியில் காட்டினால் குழந்தைக்கு அசாத்திய திறன்கள் (Super Human) கிடைக்கும் என்று மாக்சிம் லியுட்டி நம்பினார். இதற்காக தனது குழந்தைக்கு உணவு எதுவும் வழங்காமல் சூரிய ஒளியில் மட்டும் காட்டி உள்ளார். இதனால் அக்குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும்  குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நிமோனியாவால் இறந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. அதாவது, குழந்தையின் தாய் ஒக்ஸானா மிரோனோவாவை மகப்பேறு மருத்துவமனைக்குச் செல்ல லியுட்டி மறுத்ததால், காஸ்மோஸ் வீட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது.

Latest Videos

undefined

மேலும் குழந்தை பிறந்த உடன் சைவ 'பிராண' உணவை மையமாகக் கொண்ட விதிமுறைகளை பின்பற்றி உள்ளார்., குழந்தைக்கு தாய்ப் பால் கொடுக்க கூடாது என்று தனது மனைவியை அவர் கட்டாயப்படுத்தியதாகவும், சூரியன் குழந்தைக்கு உணவளிப்பதாக அவர் நம்பியதாகவும் கூறப்படுகிறது.

எனினும் அந்த குழந்தையின் தாய், ரகசியமாக குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முயன்றதாகவும் தெரிகிறது. மேலும் லியுட்டி பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை நிராகரித்ததாகவும், குழந்தையை பலப்படுத்தும் என்று நம்பி காஸ்மோஸை குளிர் நீரில் குளிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் போனது. எனினும் லியுட்டி தனது குழந்தையை மருத்துவமனைக்கு செல்ல அனுமதிக்க ஒப்புக்கொண்ட நேரத்தில் குழந்தை உயிருடன் இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. 

இதை தொடர்ந்து குழந்தையின் பெற்றோர் லியுட்டி மற்றும் மிரோனோவா இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்ற போது லியுட்டி தனது மகனின் இறப்புக்கு தான் காரணம் என்று ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு 8.5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் கிட்டத்தட்ட 900 பவுண்டுகள் அபராதம் விதிக்க வேண்டும்  கோருகின்றனர்.

click me!