கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவையில் 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 54 வயதான அனிதா ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடாவில் தேர்தலில் வெற்றிபெறும் கட்சி தலைவர் அந்த நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது வழக்கம். அதன்படி அன்மையில் நடந்து முடிந்த தேர்தலில் நாடாளுமன்றத்தில் உள்ள 338 இடங்களில் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 156 இடங்களையும், கன்சர்வேட்டிவ் கட்சி 121 இடங்களையும் கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 170 இடங்கள் தேவை என்ற நிலையில் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை அடுத்து அவர் மீண்டும் பிரதமரானார்.
அதனை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்ட்து. அதில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த 54 வயதான அனிதா ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அனிதா ஆனந்த், லிபரல் கட்சி சார்பில் ஓக்வில்லே தொகுதியில் போட்டியிட்ட 46% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு முன் கனடாவின் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் அமைச்சராக அனிதா ஆனந்த் பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது கனடாவின் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.