கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பு கூடுதல் தரவுகளை கோரி உள்ளது.
ஜெனிவா: கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க உலக சுகாதார அமைப்பு கூடுதல் தரவுகளை கோரி உள்ளது.
உலக நாடுகளை புரட்டி எடுத்த கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
உள்நாட்டில் கோவாக்சின் என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டது. ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இந்த தடுப்பூசியை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் பயன்பாட்டில் தற்போது இருக்கும் இந்த கோவாக்சின் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்புக்கு பாரத் பயோடெக் விண்ணப்பித்து உள்ளது.
அதாவது இந்த தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகார பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பாரத் பயோடெக் கோரி இருக்கிறது. இந் நிலையில் அனுமதி வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை செய்த உலக சுகாதார அமைப்பு கூடுதல் தரவுகளை கேட்டு இருக்கிறது.
ஆகையால் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைப்பதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை தற்போது உருவாகி உள்ளது. வரும் 3ம் தேதி மீண்டும் உலக சுகாதார அமைப்பின் நிபுணர் குழு கூடி ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.