அடேய் சீனாகாரா.. நீ பண்ண பாவம் சும்மா விடாதுடா.? மீண்டும் கொத்து கொத்தாக பரவுது கொரோனா.. மங்கோலியா மீது பழி.

By Ezhilarasan BabuFirst Published Oct 22, 2021, 12:16 PM IST
Highlights

சீனாவில் அந்த வைரஸ் தோன்றியிருந்தாலும், பிற நாடுகளைக் காட்டிலும் அந்த நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை ஆரம்பம் முதலே கட்டுக்குள் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசியை கண்டுபிடிக்கப்பட்டு அது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,

சீனாவில்  புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் ஒரு சில மாகாணங்களில் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கூடங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலக நாடுகளையுப் கபளிகரம் செய்துள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் இந்த வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று பாதிப்பில்  உலக அளவில் அமெரிக்கா முதலிடத்திலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 

இதையும் படியுங்கள்: துரை வைகோ நியமிக்கப்பட்டது வாரிசு அரசியல் அல்ல, வரலாற்று அரசியல்.. வைகோ மீது பாசம் மாறாத நாஞ்சில் சம்பத்.

சீனாவில் அந்த வைரஸ் தோன்றியிருந்தாலும், பிற நாடுகளைக் காட்டிலும் அந்த நாட்டின் பாதிப்பு எண்ணிக்கை ஆரம்பம் முதலே கட்டுக்குள் இருந்து வருகிறது. பல்வேறு நாடுகளில் தடுப்பூசியை கண்டுபிடிக்கப்பட்டு அது மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், ஓரளவு வைரஸ் தொற்றிலிருந்து நாடுகள் மீண்டுவர தொடங்கியுள்ளன. இந்த நேரத்தில் கொரோனா பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு மேலாக வைரஸ் அங்கு கொத்துக்கொத்தாக பரவுவதால், லான்சோ நகர் முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த நகரில் 40 லட்சத்துக்கும் மேலான மக்கள் வசித்து வரும் நிலையில், தேவையில்லாமல் மக்கள் வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்:  இந்தியா சக்தி மிக்க நாடு என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.. நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடி பெருமிதம்.

ஜியான், லான்சோ இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அந்த நகரில் உள்ள சுற்றுலாத்தலங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றை உடனடியாக மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீனாவில் முற்றிலுமாக கொரோனா வைரஸ் குறைந்து இயல்பு நிலைக்கு அந்நாட்டு மக்கள் வந்திருந்த நிலையில் மீண்டும் புதிய வகை வைரஸ் பரவி வருவது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களில் புதிய வகை வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதேபோல நாட்டின் தலைநகர் பீஜிங்கிலும் பரவலாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. லான்சோ நகரில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. நிலக்கரி இறக்கு மதிசெய்ய மங்கோலியாவில் இருந்து வந்தவர்களால்தான் கொரோனா பரவியதாக கூறப்படுகிறது. 

பல நாடுகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சீன முன்னெச்சரிக்கையாக தங்கள் நாட்டில் மட்டும்  நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ரகசியமாக முன்னெடுத்து அந்த வைரசில் இருந்து பெருமளவில் தப்பித்ததுடன், பலநாடுகளில் கொரோனா உச்சத்தில் இருந்தபோது, அதற்கு தேவையான மாஸ்க், பிபிடி கிட், கொரோனா பரிசோதனை கருவி போன்றவற்றை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெரிய அளவில் வணிகம் செய்து, சுயநலத்துடன் நடந்து கொண்டதாக பல நாடுகள் சீனாவை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் மீண்டும் அங்கு வைரஸ் தொற்று பரவி வருவது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!