நீங்கள் ஹை ஹீல்ஸ் அணிபவர்களா நீங்கள் இனி சாலையை கடக்கும் போது எச்சரிக்கையாக கடக்க வேண்டும். மெக்சிகோவில் பெண் ஒருவர் ஹை ஹீல்ஸ் செருப்பு அணிந்து வேகமாக சாலை கடக்க முயன்ற போது விபத்துக்குள்ளான சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.
மெக்சிகோவில் உள்ள சோனாரா மாகாணம் நோகாலஸ் நகரில் இந்த சம்பவம் நடைபெற்றது. மினர்வா என்ற அந்தப்பெண், வாகனங்கள் அதிகம் செல்லும் 3 வழிச்சாலையை ஒன்றை கடக்க முயற்சித்தார். அப்போது பதற்றத்தோடு பாதிசாலையை கடந்த முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவர் சாலையில் சறுக்கி விழுந்தார்.
அப்போது சாலையில் வேகமாக வந்த கார் மினர்வாவை இழுத்துக் கொண்டு சென்று நின்றது. காருக்கு அடியில் சிக்கிய மினர்வாவை அங்கிருந்தவர்கள் மீட்டனர். இந்த விபத்தில் அதிஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார்.