குழந்தைகளை வைத்து தாக்குதல் நடத்தும் பாக். தீவிரவாத அமைப்பு : ஐ.நா. அதிர்ச்சி

 |  First Published Jun 29, 2018, 12:51 PM IST
Pakistani children recruited for suicide attacks U.N. report



தீவிரவாதிகள் குறித்து ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தற்கொலைப்படை தாக்குதலை நடத்துவதற்காகவே பாகிஸ்தானிய குழந்தைகளை தீவிரவாத அமைப்புகள் தேர்ந்தெடுப்பதாக ஐக்கிய நாடுகள்  சபை கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை 2017-ம் ஆண்டு ஜனவரி - டிசம்பர் வரையிலான காலத்தில் நடந்த  உள்நாட்டுச் சண்டை மற்றும் ஆயுத மோதல்களால் பலியான, சிறுவர் - சிறுமியர் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தற்கொலை படை தாக்குதல்களை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பான வீடியோக்களை  பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் வெளியிட்டுள்ளன. 

இந்தியாவின் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், 2017-ம் ஆண்டு பாதுகாப்பு படையினருக்கு எதிராக தாக்குதல் நடத்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, ஜெய்ஷ் - இ - முகமது, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்பினர், காஷ்மீர் மாநில சிறுவர் - சிறுமியரை பயன்படுத்தினர். குறிப்பாக மதரசா உள்ளிட்ட  இடங்களில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை தீவிரவாத அமைப்புகள் தற்கொலை தாக்குதல்களுக்கு பயன்படுத்துகின்றன. 

Latest Videos

 கடந்த ஆண்டு  பிப்ரவரியில் சிந்து மாகாணத்தின் சேவான் பகுதியில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 75 பேர்  கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பள்ளிக்கூடங்களை குறிவைத்து நடத்தப்பட்ட  8 தாக்குதல்களில், 4 தாக்குதல்கள் பெண் கல்வியை எதிர்த்து  நடத்தப்பட்டுள்ளன. 

அதேபோல் கடந்தாண்டில், 21,000 வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ஈராக், மியான்மர், சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் மட்டும், 10,000 சிறுவர் - சிறுமியர் உயிரிழந்தனர். தெற்கு ஆப்ரிக்க நாடான, நைஜீரி யாவில், 450-க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை, மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி உள்ளனர். என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

click me!