துப்பாக்கியால் மிரட்டிய நபர்.. 8- ஆவது மாடியில் இருந்து ஜம்ப் அடுத்த பெண்.. என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 23, 2022, 1:41 PM IST

போலீசார் விசாரணை முடிவதற்குள் அங்கு வந்த ஜமால் பல்மீரை போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு கைது செய்தனர். 


வாஷிங்டன் டி.சி. பகுதியில் வசிக்கும் பெண் எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததை அடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

சம்பவத்தன்று வாஷிங்டன் டி.சி. பகுதியில் அமைந்துள்ள உயரமான அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் பெண் மற்றும் 22 வயதான கைல் ஜமால் பல்மீர் என்ற நபருக்கும் மோதல் வெடித்தது. முன்னதாக ஜமால் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு பெண்ணின் கை மற்றும் கால்களை கட்டி, நாற்காலியில் அமர வைத்து இருந்தார். 

Tap to resize

Latest Videos

கீழே குதித்த பெண்:

இதை அடுத்து ஜமால் பல்மீர் தான் வைத்திருந்த சட்ட விரோத துப்பாக்கியை கொண்டு அந்த பெண்ணை மிரட்டி இருக்கிறார். பின் ஜமாலிடம் இருந்து தப்பிக்க, அந்த பெண் குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியே கீழே குதித்து விட்டார். 

எட்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததை அடுத்து, அங்கிருந்து மீட்கப்பட்ட பெண் பலத்த காயங்களுடன்  அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அறையில் இருந்து பெண் கீழே குதித்தை அடுத்து துப்பாக்கி வைத்துக் கொண்டு மிரட்டிய நபர் அங்கிருந்து தப்பி சென்றார். 

போலீஸ் விசாரணை:

பெண் கீழே குதித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அடுக்குமாடி குடியிருப்புக்கு விரைந்து வந்தனர். சம்பவம் அரங்கேறிய வீட்டினுள் கட்டப்பட்ட நிலையில், இருந்த பெண்ணை மீட்டனர். அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தது. மீட்கப்பட்ட பெண்ணையும் போலீசார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

பின் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்ட போலீசார், வீட்டின் அறை ஒன்றில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ரைஃபிள் ரக துப்பாக்கியை கண்டெடுத்தனர். போலீசார் விசாரணை முடிவதற்குள் அங்கு வந்த ஜமால் பல்மீரை போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட கைல் ஜமால் பல்மீர் மீது கொலை முயற்சி, சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருந்தது மற்றும் அதிகளவு வெடி பொருட்களை வைத்திருந்தது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

click me!