உயிர் பயத்தில் 125 கி.மீ. திக்திக் பயணம்.. மரியுபோலை விட்டு எஸ்கேப் ஆன குடும்பம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

By Kevin Kaarki  |  First Published Apr 23, 2022, 11:55 AM IST

போரின் கோர காட்சிகளை பார்த்த குழந்தைகள், மவுனமாக அங்கிருந்து நடக்க துவங்கினர். அவர்களின் மனதில் என்ன நினைத்து கொண்டு இருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. 


உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷ்யா நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் மரியுபோல், யுவ்கென் மற்ரும் டெட்டியானா போன்ற பகுதிகளில் வாண்வழி வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி சேதமடைந்து வருகின்றன. போரின் இடையே கடுமையான தாக்குதல்களுக்கு மத்தியில், மரியுபோல் நகரில் இருந்து நான்கு குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடந்தே வெளியேறி இருக்கின்றனர்.

மரியுபோலில் இருந்து நடந்தே சப்போரிஷியா நகருக்கு வந்த குடும்பத்தினர், அங்கிருந்த தனியார் செய்தி நிறுவனத்திடம், தாங்கள் தப்பி வந்த திக்திக் அனுபவத்தை பகிர்ந்து கொண்டு இருக்கின்றனர். உயிர் பயம், பசி என பல சவால்களை எதிர்கொண்டு 125 கிலோமீட்டர் பயணத்தை வாழ்நாள் முழுக்க மறக்கவே முடியாது என குடும்பத்தினர் கண்ணீர் மற்றும் சிரிப்புகளுடன் தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

பயணத்திற்கு தயாரான குழந்தைகள்:

போர் தீவிரம் அடைந்து வருவதை அடுத்து குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆறு வயதே ஆன யுலியா, எட்டு வயதான ஒலெக்சாண்டர், பத்து வயதான அன்னா மற்றும் 12 வயதான இவான் ஆகியோரை பயணத்திற்கு தயார்படுத்தி இருக்கின்றனர். சுமார் இரண்டு மாதங்களாக இந்த பயணம் பற்றிய திட்டம் மற்றும் அதன் நோக்கம் குறித்து குழந்தைகளிடம் தெரிவித்து வந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

"கடந்த இரண்டு மாதங்களாக  செல்லாரில் இருக்கும் போது நாங்கள் அவர்களிடம் எல்லாவற்றையும் விளக்கி புரிய வைத்தோம். எங்கு இருக்கிறோம், எங்கு செல்ல வேண்டும் என எல்லாவற்றையும் தெரிவித்தோம். நாங்கள் இந்த நீண்ட பயணத்திற்கு அவர்களை தயார்ப்படுத்தினோம். அவர்கள் இதனை சாகசமாக பார்த்தனர்," என 40 வயதான டெட்டியானா கொமிசரோவா தெரிவித்தார். 

அதிரடி முடிவு:

கடந்த வாகம் ஞாயிற்றுக் கிழமை அன்று 37 வயதான கணவர் யெவ்கென் டிஷென்கோ உடன் இணைந்து, கிளம்ப வேண்டும் என முடிவு செய்தோம். கட்டிடத்தை விட்டு குழந்தைகளை பத்திரமாக வெளியேற்றி உள்ளனர். பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடங்கியதில் இருந்து, முதல் முறையாக கடந்த வாரம் தான் முதல் முறையாக வெளியே வந்துள்ளனர். வரும் வழியில் நகரம் அழிக்கப்படும் கோர காட்சிகளை கடந்து வந்துள்ளனர்.

"போரின் கோர காட்சிகளை பார்த்த குழந்தைகள், மவுனமாக அங்கிருந்து நடக்க துவங்கினர். அவர்களின் மனதில் என்ன நினைத்து கொண்டு இருந்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நம் நகரம் அழிந்து போவதை அவர்களால் நம்ப முடியாமல் தவித்து இருக்கலாம்," என யெவ்கன் தெரிவித்தார். 

click me!