நாயை கடித்துக் குதறி கத்தியால் குத்திய நபர் - அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Apr 23, 2022, 9:47 AM IST

திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 


வடக்கு கலிபோர்னியா பகுதியில் போலீஸ் நாயை நபர் ஒருவர் கடித்து, கத்தியால் குத்திய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. போலீஸ் நாய் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் நாயை தாக்கிய நபர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். கார்ட் என அழைக்கப்படும் போலீஸ் நாய் தாக்கப்பட்டதை அடுத்து கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது மெல்ல மீண்டு வருகிறது. 

Tap to resize

Latest Videos

போக்கு காட்டிய திருடன்:

முன்னதாக சம்பவம் அரங்கேறிய வீட்டில் இருந்து போலீசாருக்கு திருடன் புகுந்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. திருடன் அவர்களை கொலை செய்து, வீட்டில் இருக்கும் டெலிவரி டிரக்-ஐ திருடி செல்வதாக மிரட்டி இருக்கிறான். இதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 44 வயதான திருடன் வீட்டினுள் சுற்றி திரிந்துள்ளான். எனினும், திருடனை வீட்டை விட்டு வெளியே வர வைக்க முடியாமல் போலீசார் திணறி கொண்டிருந்தனர்.  

இதை அடுத்து போலீசார் அழைத்து வந்திருந்த K9 நாயை வீட்டினுள் அனுப்பினர். வீட்டிற்குள் விரைந்து சென்ற நாய் திருடனை தாக்க முற்பட்டது. அப்போது நாயை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்த திருடன், நாயின் முகத்தில் கொடூரமாக கடித்ததோடு, கத்தியால் குத்தினான் என கூறப்படுகிறது. 

கைது:

பல களேபரங்களை தொடர்ந்து திருடனை போலீசார் பிடித்துள்ளனர். மேலும் திருடனை மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளனர். திருடனுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. திருட்டு முயற்சி, கொலை மிரட்டல், போலீஸ் நாயை கொல்ல முயற்சி என பல குற்றங்களின் பேரில் திருடன் மீது சம்பந்தப்பட்ட பரிவுகளின் கீழ் வழக்கப் பதிவு செய்யப்பட்டு சோலானோ கவுண்டி ஜெயிலில் அடைக்கப்பட்டான். 

குற்ற சம்பவத்தோடு போலீசார் மற்றும் போலீஸ் நாயுடன் மல்லுக்கட்டியதை அடுத்து திருடனுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதோடு, பரோலில் வெளியில் வர முடியாத வகையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஃபார்ஃபீல்டு நகரம் வடகிழக்கு சான் பிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து இருக்கிறது. 

திருட்டு முயற்சியின் போது போலீசாரிடம் சிக்காமல் இருக்க பல்வேறு யுத்திகளை கையாண்டு, ஒரு கட்டத்தில்  போலீஸ் நாயை கடித்த நபர் தற்போது ஜெயிலில் கம்பி எண்ணும் சம்பவம் அந்த பகுதியில் பேசு பொருளாகி இருக்கிறது.

click me!