ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைப் படை தாக்குதல் தினமும் அரங்கேறி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில், 33 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலிபான்கள் ஆட்சி
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி அந்நாட்டின் ஆட்சியை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைப் படை தாக்குதல் தினமும் அரங்கேறி வருகிறது.
மசூதியில் குண்டு வெடிப்பு
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு குண்டூஸ் மாகாணத்தின் இமாம் சாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுலவி செகந்தர் மசூதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், 33 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஐ.எஸ் அமைப்பு
இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.