திடீரென்று தாக்கிய நிலச்சரிவு.. பிரிட்ஜில் 20 மணி நேரம் சுருண்டு கிடந்த சிறுவன்.. இறுதியில் என்ன ஆச்சு..?

By Thanalakshmi VFirst Published Apr 21, 2022, 11:32 AM IST
Highlights

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கிய 11 வயது சிறுவன் சமயோஜிதமாக வீட்டில் இருந்த பிரிட்ஜில் 20 மணி நேரம் இருந்து பின் மீட்கப்பட்டு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கிய 11 வயது சிறுவன் சமயோஜிதமாக வீட்டில் இருந்த பிரிட்ஜில் 20 மணி நேரம் இருந்து பின் மீட்கப்பட்டு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸில் நிலச்சரிவில் சிக்கி 11 வயது சிறுவன் ஒரு நாள் முழுவதும் குளிர்சாதன பெட்டியில் தஞ்சம் அடைந்து உயிர் பிழைத்துள்ளான். மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்ப மண்டலப் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் 159 பகுதிகளில் கடந்த புதன்கிழமை   வெப்பமண்டலப் புயல் தாக்கியது. மெகி  என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று பிலிப்பைன்ஸின் பேபே நகரில் ஏற்பட்ட மண் நிலச்சரிவில், சிறுவன் ஜோஸ்மி இருந்த வீடு சிக்கிய சேதமடைந்தது. புயலால கடும் சேதமடைந்த லெய்ட் மாகாணத்தில் மீட்பு பணியில் ஈடுப்பட்டிருந்த படையினர், உடைந்த வீட்டு சாதனத்திற்குள் சிறுவன கிடந்ததை கண்டுபிடித்து மீட்டுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட அந்த நிமிடத்தில் சமயோசிதமாக சிந்தித்த அந்த 11 வயது சிறுவன் வீட்டிலிருந்த பிரிட்ஜில் சென்று இருந்துள்ளான். சுமார் 20 மணி நேரம் புயலிருந்து இருந்து தற்காத்துக் கொள்ளுவதற்காக பிரிட்ஜினுள் இருந்துள்ளான். பின்னர் மீட்புக்குழுவினர் ஆற்றங்கரையில் கிடந்த பிரிட்ஜ்யினை திறந்து சிறுவனை பத்திரமாக காப்பாற்றினர். 

நிலச்சரிவு காரணமாக சேற்றில் உடைந்த நிலையில் கிடந்த பிரிட்ஜினை பத்திரமாக மீட்புபடையினர் முதலில் எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அதனை திறந்து 11 வயது சிறுவனை மீட்டனர். அந்த சிறுவன் மீட்கப்பட்ட போது, முதலில் பேசிய வார்த்தை எனக்கு ரொம்ப பசிக்குது என்ற அதிகாரிகளிடம் தெரிவித்தது தான் என்று காவல்துறையினர் கூறினர்.

நிலச்சரிவில் சிறுவன் காலில் முறிவு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் நிலச்சரிவில் சிக்கிய சிறுவனின் தாயும், சகோதரையும் மீட்பு படையினர் தேடி வருகின்றனர். அதே நேரத்தில் அவரது தந்தை ஒரு நாள் முன்பு மற்றொரு நிலச்சரிவில் உயிரிழந்துள்ளார். 

இதற்கிடையில், பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகள் வெள்ளம் மற்றும் மோசமான நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. புயலைத் தொடர்ந்து, பேபே நகரில் மட்டும் கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 172 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதுகாப்பு கருதி 200 மில்லியனுக்கும் அதிகமான மக்களை இப்பகுதியை விட்டு வெளியேற காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புயலில் சிக்கி காணமால் போனவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.

click me!