இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் திருமண அரங்கில் நுழைந்த விதம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் திருமண அரங்கில் நுழைந்த விதம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இத்தாலியில் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் தன் தந்தை, தாயுடனோ அல்லது மணமகனுடனே திருமண அரங்கிற்குள் நுழையவில்லை. மாறாக வானில் பறந்து வந்து திருமண அரங்கிற்குள் நுழைந்தார். சுமார் 250 ஹீலியம் பலூன்களை தன் உடலுடன் கட்டிக்கொண்டு காற்றில் பறந்து மிதந்தபடி அரங்கிற்குள் நுழைந்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சமீப காலமாக திருமணம் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் வித்தியசமான முறையில் மேடைகளை அமைப்பது, திருமண அரங்குக்குள் மணமகன், மணமகள் ஆடிக்கொண்டு வருவது உள்ளிட்ட அனைவரையும் கவரும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. திருமணத்தை பிறர் நடத்தியதை விட சிறப்பாகவும் பிரமாண்டமாகவும் நடத்த வேண்டும் என்ற போட்டி மனப்பாண்மையும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.
இப்படி ஒரு திருமணத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்று கூறும் அளவிற்கு திருமணம் நிகழ்ச்சியை நடத்திட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் திருமண அரங்கில் நுழைந்த விதம் அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. மேலும் இதுக்குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இத்தாலியில் திருமண நிகழ்வு ஒன்றில் மணமகள் தன் தந்தை, தாயுடனோ அல்லது மணமகனுடனே திருமண அரங்கிற்குள் நுழையவில்லை. மாறாக வானில் பறந்து வந்து திருமண அரங்கிற்குள் நுழைந்தார்.
சுமார் 250 ஹீலியம் பலூன்களை தன் உடலுடன் கட்டிக்கொண்டு காற்றில் பறந்து மிதந்தபடி அரங்கிற்குள் நுழைந்தார். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்த வீடியோவை சமூக வலைதளத்திலும் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ 4 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பலர் இதனை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில், மணமகள், திருமண கவுன் அணிந்து, ஹீலியம் பலூன்களின் உதவியுடன் காற்றில் மிதப்பதைக் காணலாம். மணமகளின் அலங்காரத்துடன் ஒருங்கிணைக்க வெள்ளை நிறத்தில் ஆன பலூன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மணமகள் தனது திருமண அலங்காரத்துடன் வைரம் பதிக்கப்பட்ட தலைப்பாகையும் அணிந்திருக்கிறார். இது அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்தது.