தோழியின் தந்தையை திருமணம் செய்த பெண்... இவ்வளவு வயது வித்தியாசமா?

By vinoth kumar  |  First Published Oct 20, 2018, 3:32 PM IST

அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் டெய்லர் (27), அமண்டா (30). இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். நெருங்கிய தோழிகளாகவும் அவர்கள் பழகி வந்தனர்.


அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் டெய்லர் (27), அமண்டா (30). இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் பணிபுரிகின்றனர். நெருங்கிய தோழிகளாகவும் அவர்கள் பழகி வந்தனர். அமண்டாவின் தந்தை கெர்ன் லெய்மன் (54)-ஐ டெய்லருக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ஆரம்பத்தில் லெய்மனுடன் டெய்லர் நட்பாகவே பழகி வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு லெய்மனை, டெய்லர் காதலிக்க தொடங்கியுள்ளார். 

தந்தை வயதுடைய ஒருவரை மகள் காதலிப்பதால் டெய்லரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல், டெய்லரின் தோழி அமண்டாவும் இந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனாலும், டெய்லரும் லெய்மனும் திருமணம் செய்து கொண்டே தீருவோம் என்று விடாப்பிடியாக இருந்த காரணத்தால் தோழி அமண்டா இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 

Latest Videos

இதன் பின்னர், டெய்லரும் - லெய்மனும் திருமணம் செய்து கொண்டனர். 27 வயது வித்தியாசம் கொண்ட தந்தை வயதில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்து கொண்டது குறித்து டெய்லர் கூறும்போது, நான் முதன் முறையாக லெய்மனை பார்ததபோது அவர் அழகாக இருப்பதாக நினைத்தேன். எங்கள் வயது வித்தியாசம் குறித்து கவலை இல்லை. எங்களை பார்ப்பவர்கள் தந்தை - மகள் என நினைத்து விடுகின்றனர். 

மற்றவர்கள் எங்களைப் பற்றி நினைப்பதற்கு நான் கவலைப்படவில்லை. உயிர்தோழி எங்களை ஏற்றுக் கொண்டதே எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. லெய்மன் என் மீது பாசத்தோடும், அக்கறையோடும் இருக்கிறார் என்கிறார் டெய்லர். டெய்லர் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவர் மிகவும் நேர்மையானவள். எனக்கு மனைவியாக மட்டுமில்லாமல் சிறந்த தோழியாகவும் டெய்லர் இருப்பதாக லெய்மன் கூறுகிறார். எது எப்படியோ, தற்போது அமண்டா, டெய்லர், லெய்மன் மூவரும் மகிழ்ச்சியாக ஒற்றுமையோடு வாழ்கிறார்கள்.

click me!