உலகம் முழுவதும் You Tube இணையதளம் திடீரென முடங்கியது. சர்வர் பிரச்சனை காரணமாக முடங்கியதால் அதனைப் பயன்படுத்துவோர் திண்டாடி வருகின்றனர். இதையடுத்து சர்வரை சரிசெய்யும் வேலைகளை அந்நிறுவனம் செய்து வருகிறது.
கோடிக்கணக்கான பேர் You Tube இணைய தளத்தை உலகம் முழுவதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த இணையதளம் இல்லாவிட்டால் முழு உலகமே முடங்கிவிடும் என்ற நிலையே இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை முதல் திடீரென You Tube இணையதளம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் தனிப்பட்ட பொது மக்கள் மட்டுமல்லாமல் பெரிய நிறுவனங்களும் முடங்கிப் போயுள்ளன.
You Tube இணையதளத்தின் சர்வர் திடீரென முடங்கிப் போனதால் இந்த தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பழுதை சரிபார்க்கும் பணிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. ஒரு சில மணி நேரங்களில் சர்வர் சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது