சிங்கப்பூரில், அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ஆறு ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகள் வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
சிங்கப்பூரில், அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ஆறு ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகள் வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. இதில், இதுவரை கோடிக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இன்னுமும் சிலர் மருத்துவமனையில் சகிச்சை பெற்று வருகின்றனர்.
பல்வேறு விதிமுறைகள், பொது முடக்கம், கட்டுப்பாடு என பல்வேறு சிக்கல்களுக்குப் பிறகு கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது குளிர் காலம் தொடங்கியுள்ளதால் மீண்டும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எனவே, சிங்கப்பூர் அரசு கொரோனா தொற்று பரவுவதை தடுக்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 6 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகள் வழங்குகிறது. அக்கருவிகள் இன்று முதல் வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படும் இந்த ஏஆர்டி கருவிகளை இந்த ஆண்டு இறுதி வரைக்கும் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலத்தின் போது ஏற்படும் சளிக்காய்ச்சல், கொவிட்-19 போன்ற கிருமிகள் எளிதில் பரவக்கூடும் என்பதல், மக்கள் பயணம் செய்யும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க இந்த ‘ஏஆர்டி’ கருவிகள் உதவியாக இருக்கும் என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் ‘ஏஆர்டி’ கருவிகள் வழங்கப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல. இது 5வது முறை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழங்கப்பட்ட 4வது நடவடிக்கையின்போது 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தலா 12 கருவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை நோய்தொற்றிலிருந்து பாதுகாக்க போதிய நடவடிக்கைகளை பொதுமக்களும் மேற்கொள்ள வேண்டும் என சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.