பாகிஸ்தானில் ஒரே நாளில் இரண்டு இந்து கோயில்கள் இடிப்பு! ராக்கெட் வீசப்பட்டதால் உச்சகட்ட பரபரப்பு!

By SG Balan  |  First Published Jul 16, 2023, 11:39 PM IST

பாகிஸ்தானின் சிந்து  மாகாணத்தில் இரண்டு இந்துக் கோயில்கள் ஒரே நாளில் மர்ம கும்பலால் தாக்கப்பட்டுள்ளன. ஒரு கோயில் மீது ராக்கெட் வீசப்பட்டுள்ளது.


பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் 24 மணி நேரத்திற்குள் இரண்டு இந்து கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் சம்பவம் கராச்சியில் நடைபெற்றது. சனிக்கிழமை காலை சோல்ஜர் பஜாரில் உள்ள பழைய மாரி மாதா கோயில் தரைமட்டமாக்கப்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் இல்லாத நிலையில் இந்த நடவடிக்கை நடந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கட்டிடம் முழுவதையும் இடிக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் பிரதான வாயில் மட்டும் அப்படியே விடப்பட்டுள்ளன. ஜேசிபி இயந்திரங்களை இயக்கிய நபர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக போலீஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

“இது மிகவும் பழமையான கோயில். கோவில் சுமார் 400 முதல் 500 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் கோயில் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது” என அருகிலுள்ள மற்றொரு கோவிலின் பூசாரி ஸ்ரீ ராம் நாத் மிஸ்ரா சொல்கிறார். இந்தக் கோயில் கராச்சியின் மதராசி இந்து சமூகத்தினரின் நிர்வாகத்தின் கீழ் இருந்தத எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை! ம.பி. பாஜக தலைவரின் மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கோயில் கட்டிடம் மிகவும் பழமையானதாகவும் ஆபத்தான நிலையிலும் இருந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. எந்த நேரத்தில் இடிந்து விழும் அபாயம் இருந்ததாவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக, கோயிலில் இருந்து பெரும்பாலான தெய்வங்களை கோயில் நிர்வாகம் தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றியுள்ளதாகவும் சொல்கின்றனர்.

இந்த விவகாரம் குறித்து கவனம் எடுத்து விசாரிக்குமாறு பாகிஸ்தான் - இந்து கவுன்சில் மற்றும் சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி ஷாவிடம் அந்நாட்டு இந்து மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை சிந்து மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில், காஷ்மோர் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் ராக்கெட் லாஞ்சர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கோயில் மட்டுமின்றி அதன் அருகில் உள்ள இந்துக்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருப்பதி கோயிலுக்கு தங்கத்தில் அபிஷேக சங்கு வழங்கிய சுதா - நாராயணமூர்த்தி தம்பதி

காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்குச் சென்றபோது, மர்ம கும்பல் கோயில் மற்றும் வீடுகளில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். தாக்குதலின் போது மூடப்பட்ட வழிபாட்டு தலத்தின் மீது ராக்கெட் லாஞ்சர் ஏவப்பட்டதாவும் கூறியுள்ளனர்.

இந்தக் கோயில் பக்ரி சமூகத்தால் நடத்தப்படுவது ஆகும். இந்தத் தாக்குதலில் எட்டு முதல் ஒன்பது துப்பாக்கி ஏந்தியவர்கள் இருந்ததாகவும் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய அவர்களைத் தேடிவருவதாகவும் அந்நாட்டுக் காவல்துறை சொல்கிறது. ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கவில்லை என்பதால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லைவும் கூறுகின்றனர்.

இதற்கிடையில், பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையம் இந்தத் தாக்குதல்களைக் கவனித்து கருத்து தெரிவித்துள்ளது. “சிந்துவில் உள்ள காஷ்மோர் மற்றும் கோட்கி மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 30 இந்து சமூகத்தினர் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் செய்திகள் அச்சமூட்டுவதாக இருக்கிறது" என ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தாமதமின்றி விசாரிக்கவும் சிந்து மாகாண அரசுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

click me!