நேற்று ஜூலை 16ம் தேதி நடந்த போட்டியில், பெரேரா 22.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து சாதனையை முறியடித்தார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தற்போது தாய்லாந்து தலைநகர் பாங்காகில் நடைபெற்று வருகின்றது. இதில் 200மீ ஓட்டப்பந்தையதில் சிங்கப்பூரின் "Sprint Goddess" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் சாந்தி பெரேரா மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். நேற்று ஜூலை 16ம் தேதி நடந்த போட்டியில், பெரேரா 22.70 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முன்னதாக படைக்கப்பட்ட சாதனையை முறியடித்தார்.
6 தங்கம், 12 வெள்ளி மற்றும் 9 வெண்கலத்துடன் 3ஆவது இடம் பிடித்த இந்தியா!
நேற்று நடந்த அந்த போட்டியில் 22.70 வினாடிகளில் பந்தய தூரத்தை சாந்தி கடந்த நிலையில், 23.13 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார் இந்தியாவின் ஜோதி யர்ராஜி, மேலும் பந்தய தூரத்தை 23.25 வினாடிகளில் கடந்து மூன்றாவது இடத்தைப் பிடித்தார் சீனா வீராங்கனை லி யு டிங்.
முன்னதாக பஹ்ரைனின் சல்வா ஈத் நாசர் என்ற வீராங்கனை தான் இந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தையதில் சாம்பியனாக இருந்து வந்தார். இந்நிலையில் அவருடைய சாதனையை, 0.04 வினாடிகள் வேகமாக ஓடி முறியடித்துள்ளார் சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை 14ம் தேதி நடந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தையத்திலும் சாந்தி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும், சாந்தி பிறந்து, வளர்ந்தது எல்லாமே சிங்கப்பூரில் தான். சிங்கப்பூருக்காக பல போட்டிகளில் கலந்துகொண்டு பல சாதனைகளை தொடர்ச்சியாக படைத்தது வருகின்றார் சாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து தொடருக்கு டிராவிட் உள்ளிட்ட பயிற்சியாளருக்கு ஓய்வு; களமிறங்கும் விவிஎஸ் லட்சுமணன்!