உக்ரைனுடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு பொறுப்பேற்று ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விளாடிமிர் புதின் விலக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைனுடனான போர் தொடர்ந்து வரும் நிலையில், நாட்டின் பொருளாதாரச் சீர்குலைவுக்கு பொறுப்பேற்று ரஷ்ய அதிபர் பதவியிலிருந்து விளாடிமிர் புதின் விலக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
உக்ரைனுடன் போர் தொடர்ந்தால், தனது ஆட்சி தானாகவே கவிழக்கூடும் என்று அச்சப்படுவதையடுத்து, புதின் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
டொனால்ட் ட்ரம்ப் நிறுவனம் மீது மோசடி வழக்கு.. இது என்னடா ட்ரம்புக்கு வந்த சோதனை.!!
உக்ரைனுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதுவரை இரு தரப்பிலும் ஏராளமான பொருட் சேதங்கள், உயிரிழப்புகள் நடந்துள்ளன. ஆனாலும் போரை முடிவுக்கு கொண்டுவராமல் ரஷ்யா தொடர்ந்து போரிட்டு வருகிறது.
ரஷ்யாவின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்த அமெரி்க்கா, ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், ஜப்பான் ஆகியவை பொருளாதாரத் தடை விதித்தன. ரஷ்யாவை உலக நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கிவைத்தன. எந்தவிதமான வர்த்தகமும், ஏற்றுமதியும், இறக்குமதியும் செய்யத் தடைவிதித்ததால் ரஷ்யாவின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது.
மக்கள் மத்தியில் ரஷ்ய அதிபர் புதினுக்கான புகழ் படிப்படியாகக் குறைந்து வருகிறது, ரஷ்ய மக்களில் ஒருபகுதியினரே உக்ரைனுடனான போரை விரும்பவில்லை. மேலும், உக்ரைனுடன் போருக்குப்பின் ரஷ்யாவும் கடுமையான பாதிப்புகளை அடைந்துள்ளது.
இலங்கை ஈஸ்டர் தீவிரவாத தாக்குதல்! முன்னாள் அதிபர் ரூ.10 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இதையடுத்து, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தனது அதிபர் பதவியிலை விட்டு விலகி, தனது வாரிசு அல்லது நம்பிக்கையானவரை அதிபராக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யஅதிபர் புதினின் ஆலோசகரும், அரசியல் பேச்சு எழுத்தாளருமான அப்பாஸ் காலமோவ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ ரஷ்ய அதிபர் புதின் அதிபர் பதவியிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளார். சர்வாதிகாரி முகமது கடாபியை மக்கள் ஆட்சியில் இருந்து இறக்கியதுபோல் இறக்காமல், அந்த கொடூரமான சூழல் வருவதை புதின் விரும்வவில்லை.
ஆதலால், தனக்குப்பின் யார் அதிபராகலாம் என்பதை கைகாட்டிவிட்டு, அல்லது நியமித்துவிட்டு, கருங்கடலில் 100 கோடி மதிப்பில் கட்டியுள்ள தனது அரண்மனையில் கடைசிக் காலத்தை புதின் செலவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்
இலங்கை முன்னாள்அதிபர்கள் கோத்தபய, மகிந்தா ராஜப்கசேவுக்கு கனடா அரசு தடை
ரஷ்ய அதிபரின் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில் “ உக்ரைன் போரால் ரஷ்யாவும், உக்ரைனும் பொருளாதார ரீதியாக மோசமான சூழலுக்கு வந்துவிட்டன. இதனால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கலாம். அதிபர் பதவியை புதின் கைவிட்டு, வேறுஒருவருக்கு மாற்றலாம், மற்றும்அரசியல் வல்லுநர் அல்லது தொழில்நுட்ப வல்லுநர் அரசுக்குள் வரலாம்.
உக்ரைன் போருக்குப்பின், புதினுக்கு நெருங்கிய வட்டாரங்களே அவர் இனிமேல்நிலையான ஆட்சியை அளிப்பார் என்று நம்பவில்லை.புதின் முன்வைத்துள்ள பல்வேறு கொள்கைக்கு எதிராகவே பல அரசு அதிகாரிகள் நடந்து வருகிறார்கள். இதனால்தான் புதின் தனது ஆட்சி கவிழ்க்கப்படலாம் என்று அஞ்சுகிறார்.
விளாடிமிர் புடினும் அவரது கூட்டாளிகளும் வாக்னர் தனியார் ராணுவ தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜினின் எழுச்சியால் பீதியடைந்துள்ளனர், இது இதுவரை கிரெம்ளினுக்கு விசுவாசமாக இருந்து வருகிறது, ஆனால் போரில் தோல்வியுற்றால் அவர்கள் புதினுக்கே எதிராகத் திரும்பக் கூடும்” எனத் தெரிவிக்கின்றன