இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் அதிபர் சிறீசேனா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள், ஹோட்டல்களில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் அதிபர் சிறீசேனா ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு நகரில் உள்ள தேவாலயம், ஹோட்டல்களில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 11 இந்தியர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
ராணுவத்தின் அளவை பாதியாகக் குறைக்க இலங்கை அரசு முடிவு
இந்த தாக்குதல் குறித்து இந்திய அரசு முன்கூட்டியே எச்சரிக்கை செய்தும், இலங்கை அரசு வழிப்புடன் இல்லாமல் இருந்ததால் மிகப்பெரிய தாக்குதலும் உயிரிழப்பும் ஏற்பட்டது. அப்போது அதிபராக இருந்த மைத்திரிபால சிறீசேனா, பிரதமர் விக்ரமசிங்கே இருவருமே தாக்குதலை தடுக்க தவறிவிட்டனர் என குற்றம்சாட்டப்பட்டது.
இந்த தீவிரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்க சிறீசேனா நியமித்த விசாரணைக் குழுவே, தாக்குதல் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அதைத் தடுக்க அரசு தவறிவிட்டது எனத் தெரிவித்தது. ஆனால், இதை மறுக்கும் சிறிசேனா தொடர்ந்து மறுத்து வருகிறார்.
இந்நிலையில் தாக்குதலில் பாதி்க்கப்பட்டோர், உறவுகளை இழந்தவர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், எங்களின் வாழும் உரிமையை இலங்கை அரசு பறித்துவிட்டது. தீவிரவாத தாக்குதலைத் தடுக்க தவறிவிட்டது இதற்கு இழப்பீடு தரக்கோரியிருந்தனர்.
இலங்கை முன்னாள்அதிபர்கள் கோத்தபய, மகிந்தா ராஜப்கசேவுக்கு கனடா அரசு தடை
இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து நேற்று தீர்ப்பளித்தது. அதில் “ தாக்குதல் நடந்தபோது அதிபர் பதவியிலும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் இருந்த சிறீசானா தாக்குதலைத் தடுக்க தவறியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
முன்னாள் காவல்துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா மற்றும் உளவுத்துறை தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனா ஆகியோர் தலா ரூ.1.67 கோடி இழப்பீடு வழங்கிட வேண்டும். முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளர் ஹேமாஸ்ரீ பெர்னான்டோ ரூ.1.11 கோடியும், தேசிய உளவுத்துறை தலைவர் சிசிரா மென்டிஸ் ரூ.23 லட்சமும் இழப்பீடாக வழங்கிட வேண்டும். இவர்கள் அனைவரும் தங்களின் சொந்த பணத்தைஇழப்பீடாக பாதிக்கப்பட்டவர்களின் இழப்பீட்டுத் தொகையில் சேர்க்க வேண்டும்” என தீர்ப்பளித்தனர்