வரும் 2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தின் அளவு, வலிமையை பாதியாகக் குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
வரும் 2030ம் ஆண்டுக்குள் ராணுவத்தின் அளவு, வலிமையை பாதியாகக் குறைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
அதேசமயம், பாதியாகக் குறைத்து, ராணுவத்தை தொழில்நுட்ப ரீதியாகவும், திட்டங்கள் வகுப்பது ரீதியாகவும் வலிமையாக மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள்அதிபர்கள் கோத்தபய, மகிந்தா ராஜப்கசேவுக்கு கனடா அரசு தடை
2023ம் ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்வியைவிட அதிகமாக ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய்பட்டதற்கு கடும் விமர்சனங்கள் வந்ததைத் தொடர்ந்து இந்த முடிவை இலங்கை அரசு எடுத்துள்ளது.
இலங்கை ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 2030ம் ஆண்டுக்குள், ஒரு லட்சம் வீரர்களாகக் குறைக்கப்பட உள்ளது. தற்போது இலங்கை ராணுவத்தில் 2 லட்சத்து 783 பேர் பணியாற்றி வருகிறார்கள், இதை அடுத்த ஆண்டுக்குள் 1.35 லட்சமாக குறைக்கப்பட உள்ளது என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை பாதுகாப்புத்துறை இணைஅமைச்சர் பிரமிதா பண்டார தெனாகூன் கூறுகையில் “ இலங்கை ராணுவத்தின் அளவை பாதியாகக் குறைத்து, தொழில்நுட்ப ரீதியாகவும், ராஜங்கரீதியாகவும் சமவலிமை படைத்த அமைப்பாக மாற்ர உள்ளோம். இந்த இலக்கை 2030ம் ஆண்டுக்குள் எட்டிவிடுவோம்” எனத் தெரிவித்தார்
2023ம்ஆண்டு இலங்கை பட்ஜெட்டில் ராணுவத்துக்கு 53900 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த 1948ம் ஆண்டுக்குப்பின் இலங்கை மோசமான பொருளாதாரப் பிரச்சினையைச் சந்தித்து வரும் நிலையிலும், ராணுவத்துக்கு இந்தத் தொகையை ஒதுக்கியுள்ளது.
பிரேசில் நாட்டில் என்ன குழப்பம் நடக்கிறது? ஏன் பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்? விரிவான பார்வை
கல்விக்கு 30000 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விக்கானநிதியைவிட ஒரு மடங்குகூடுதலாக ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது ராணுவத்தில் 4 லட்சம் வீரர்கள் பணியாற்றினர். உள்நாட்டுப் போர் முடிந்தபின் இலங்கை ராணுவத்தின் அளவு 2 லட்சம் வீரர்களாகக் குறைக்கப்பட்டது. இப்போது அதிலிருந்தும் பாதியாக ஒரு லட்சத்துக்குள் குறைக்கப்பட உள்ளது.