AC Charania: நாசா உயர் பதவியில் இந்திய வம்சாவளி தொழில்நுட்ப வல்லுநர்

By SG Balan  |  First Published Jan 11, 2023, 10:34 AM IST

நாசாவில் தலைமை தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஏசி சரணியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைமையகத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பதவி இந்திய வம்சாவளி விண்வெளியைச் சேர்ந்த ஏ. சி. சரணியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 3ஆம் தேதி முதல் அவர் தனது பணியைத் தொடங்கியுள்ளார்.

தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பில் நெல்சனின் ஆலோசகராகவும் செயல்பட இருக்கிறார். விண்வெளிப் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் இதற்கு முன் தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

Latest Videos

undefined

ரிலையபிள் ரோபாட்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்த அவர் பொதுப் பயன்பாட்டுக்கான தானியங்கி வாகனங்களை உருவாக்கும் பிரிவில் பணியாற்றினார்.

No Trousers Day: பாரம்பரிய முறையில் பேண்ட் அணியாமல் திரியும் லண்டன் மக்கள்!

வெர்ஜின் ஆர்பிட் நிறுவனத்தில் பணியாற்றியபோது சிறிய செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவது தொடர்பான பணிகளில் பங்குகொண்டிருக்கிறார்.

இவருக்கு முன்பு நாசாவில் இதே பணியிடத்தில் இடைக்காலப் பொறுப்பில் இருந்த பவ்ய லால் என்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!