ஊரடங்கு மட்டும் கொரோனாவை ஒழித்து விடுமா..? உலக சுகாதர அமைப்பு எச்சரிக்கை..!

By Thiraviaraj RM  |  First Published Mar 26, 2020, 10:55 AM IST

வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 
 


வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறும்போது, கொரோனா பரவலை கட்டுபடுத்த பல நாடுகள் "ஊரடங்கு" நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், இந்த நடவடிக்கைகள் தொற்றுநோயை ஒழிக்க பலன் தராது.

Latest Videos

கொரோனா வைரஸ் தாக்குதலை ஒழிக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தை பயன்படுத்துமாறு அனைத்து நாடுகளையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் வாய்ப்பின் 2வது சாளரத்தை உருவாக்கியுள்ளீர்கள் என்று கூறியுள்ளார். 

மேலும், ஊரடங்கு மூலம் மக்களை வீட்டிலேயே இருக்க சொல்வதும், மக்கள் நடமாட்டத்தை நிறுத்துவதும் சுகாதாரத்துறையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். ஆனால், இந்த நடவடிக்கைகள் தொற்றுநோய் பரவலை குறைக்காது. 

அதனால், ஊரடங்கு நடவடிக்கையை அமல்படுத்தியுள்ள அனைத்து நாடுகளையும் நாங்கள் இந்த நேரத்தை வைரஸை ஒழிக்க பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். நீங்கள் 2 வது வாய்ப்பை உருவாக்கியுள்ளீர்கள், அதனை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என்பது தான் கேள்வி..

பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு யோய் பரவியிருக்க கூடும் என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யும் வசதியை உருவாக்க வேண்டும். சுகாதார பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். 

To slow the spread of , many countries introduced "lockdown" measures. But on their own, these measures will not extinguish epidemics. We call on all countries to use this time to attack the .
You've created a 2nd window of opportunity. pic.twitter.com/jupcsdYnWm

— Tedros Adhanom Ghebreyesus (@DrTedros)

 

உலகளவில் கொரோனாவுக்கு 18,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார மையம் கொரோனா குறித்த தனது தினசரி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

click me!