Explained: நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் நடப்பது ஏன்?

By SG Balan  |  First Published Jan 16, 2023, 11:43 AM IST

நேபாளத்தில் தொடர்ந்து விமான விபத்துகள் நடந்துவருவகின்றன. அந்நாட்டில் 30 ஆண்டுகளில் 27 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.


நேபாளத்தில் 5 இந்தியர்கள் உள்பட 72 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த விமானக் குழுவினர் நால்வர் உள்பட 68 பேர் உயிரிழந்தனர். அந்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பொக்காரா விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும்போது இந்த விபத்து நடந்துள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் இரட்டை எஞ்சின் கொண்ட யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஆகும். காத்மண்டு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம் ஞாயிறு காலை 11 மணி அளவில் விபத்துக்குள்ளானதாகத் தெரிகிறது.

Tap to resize

Latest Videos

அந்நாட்டில் விமான விபத்து அடிக்கடி நடப்பது கவனிக்கத்தக்கது. கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 22 பேருடன் சென்ற தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் பலியானார்கள்.

போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாதது, விமானப் பணியாளர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்காதது ஆகியவையே நேபாளத்தில் விமான விபத்துகள் நடப்பதற்கு முக்கியக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

Ukrine Russia Attacks: உக்ரைனில் ரஷ்யாவின் வெறியாட்டம்... பல கட்டிடங்கள் தரைமட்டம்!

விமானப் பாதுகாப்புத் தரவுத்தளம் அளிக்கும் தகவலின்படி, கடந்த 30 ஆண்டுகளில் 27 பயங்கரமான விமான விபத்துகள் நடந்துள்ளன என்று தெரியவருகிறது.

வானிலை நிலவரத்தைச் சரியாகக் கணிக்காதது, போதிய பயிற்சி இல்லாத  விமானிகள், விமானம் இயக்குவதை கடினமாக்கும் மலைப்பகுதிகள், விமானங்களில் புதிய முதலீடுகள் செய்யாதது, உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்புக் குறைபாடுகள் முந்தைய விமான விபத்துகளுக்குக் காரணமாக இருந்துள்ளன.

2013ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் பாதுகாப்புக் காரணங்களுக்காக நேபாள விமானங்களைத் தடை செய்தது. இதனால், ஐரோப்பிய வான் எல்லைக்குள் நேபாள விமானங்கள் நுழையவே முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

click me!