
Why COVID -19 Cases Increase in Southeast Asian Countries : தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கோவிட்-19 (COVID -19) புதிய அலை பரவி வருகிறது. ஹாங்காங், சிங்கப்பூர் போன்ற நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. இது ஒரு வருடத்தில் முதல் பெரிய அதிகரிப்பாக இருக்கிறது என்று ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID -19 தாக்கம்:
ஹாங்காங்கில் கோவிட்-19 மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாக சுகாதார பாதுகாப்பு மையத்தின் தொற்றுநோய் கிளையின் தலைவர் ஆல்பர்ட் கூறியுள்ளார். மே 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில், கோவிட்-19 வால் 31 இறப்புகள் ஹாங்காங்கில் பதிவாகி உள்ளன.
இதற்கிடையில் சிங்கப்பூரிலும் கோவிட் - 19 வழக்குகளில் 28% அதிகரித்துள்ளதாக பதிவாகியுள்ளது. மே முதல் வாரத்தில் கோவிட்-19 எண்ணிக்கையானது 14,200 எட்டியுள்ளது. அதே சமயத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோரின் எண்ணிக்கையானது சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளன.
தாய்லாந்து மற்றும் சீனாவில் COVID -19 தாக்கம்:
தாய்லாந்து, சீனாவிலும் இந்த COVID -19 அதிகரிப்பு காணப்படுகிறது. அதுவும் சீனாவில் கடந்த கோடை உச்சத்தில் காணப்பட்ட அளவை நெருங்கி வருகிறது. அதே சமயத்தில் தாய்லாந்திலும் தொற்றானது கொத்துக்களாக உருவாகியுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் மாதம் நடந்த சாங்க்ராங் திருவிழாவிற்கு பிறகு.
COVID -19 ஆல் இந்திய ஆபத்தில் உள்ளதா?
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் COVID -19 வேகமாக பரவி வருவகிறது. இந்த COVID -19 தொற்றானது எவ்வளவு தூரம் பரவக் கூடும் என்றும், இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா? என்பது குறித்து கேள்விகளும் தற்போது எழுப்பப்படுகின்றன. இதுகுறித்து குடும்ப நல்ல அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டேஸ்போர்ட்டின் படி, இந்தியாவில் தற்போது COVID -19 ஆல் 93 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மேலும் இதுவரை நாட்டில் எந்தவொரு புதிய அலைக்கான அறிகுறிகள் ஏதுமில்லை. எனவே, COVID -19 குறித்து மக்கள் அசைப்பட தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
COVID -19 மீண்டும் வர காரணம் என்ன?
கோவிட் -19 மீண்டும் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை;-
1. புதிய மாறுபாடுகள் - கொரோனா வைரஸ் ஆனது புதிய மாறுபாடுகளால் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்று வர வாய்ப்பு அதிகம்.
2. தடுப்பூசி போடாமல் இருப்பது - பலர் தடுப்பூசி போடாமல் இருப்பதால், வைரஸ் பரவும் அபாயம் அதிகமாகவே இருக்கிறது.
3. சுகாதாரமின்மை - கைகளை கழுவாமல் இருப்பது, முக கவசம் அணியாமல் இருத்தல், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருத்தல் போன்றவற்றால் வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளன.
4. அதிக கூட்டம் இருக்கும் இடங்கள் - மக்கள் அதிகம் கூடும் இடங்கள் பொதுப் போக்குவரத்து போன்ற பல இடங்களில் வைரஸ் பரவும் அபாயம் அதிகமாக இருக்கிறது.
5. அலட்சியம் - நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டினால் கண்டிப்பாக வைரஸ் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.