பூமியின் கிரெட்டேசியஸ் அடுக்கைக் குறிவைத்து சீனா 10 ஆயிரம் மீட்டர் ஆழ்துளையைப் போடும் பணியைத் தொடங்கி இருக்கிறது. இதைக் கொண்டு பூமியை ஆராயப் போகிறார்களாம்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடான சீனா பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயும் கீழேயும் புதிய எல்லைகளை ஆராய்வதால், அந்நாட்டு விஞ்ஞானிகள் நிலத்தில் 10,000 மீட்டர் (32,808 அடி) துளையை போடத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் ஆழமான ஆழ்துளைக் கிணறுக்கான துளையிடும் பணி செவ்வாயன்று நாட்டின் எண்ணெய் வளம் மிக்க ஜின்ஜியாங் பகுதியில் தொடங்கியது. இது குறித்து அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தகவல் வெளியிட்டுள்ளது. செவ்வாய் காலையில், சீனா தனது முதல் சிவிலியன் விண்வெளி வீரரை கோபி பாலைவனத்திலிருந்து விண்வெளிக்கு அனுப்பியது.
நம்பிக்கைக்குரிய பாதையில் இந்தியப் பொருளாதாரம்! ஜிடிபி வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!
தரையில் உள்ள குறுகிய தண்டு 10 க்கும் மேற்பட்ட கண்ட அடுக்குகளை அல்லது பாறை அடுக்குகளை ஊடுருவி, பூமியின் மேலோட்டத்தில் உள்ள கிரெட்டேசியஸ் அமைப்பை அடையும். இந்த கிரெட்டேசியஸ் பகுதி சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பாறையைக் கொண்டதாகும்.
"துளையிடும் திட்டத்தின் கட்டுமான சிரமத்தை இரண்டு மெல்லிய எஃகு கேபிள்களில் இயங்கும் பெரிய டிரக்குடன் ஒப்பிடலாம்" என சீன பொறியியல் அகாடமியின் விஞ்ஞானி சன் ஜின்ஷெங் சின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
2 மணிநேரம் கதறி அழுதேன்! வேலையை இழந்ததால் குமுறும் மெட்டா நிறுவன ஊழியர்
சீன அதிபர் ஜி ஜின்பிங், 2021ஆம் ஆண்டில் நாட்டின் சில முன்னணி விஞ்ஞானிகள் முன்னிலையில் ஆற்றிய உரையில் புவியின் ஆழத்தை ஆய்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த அழைப்பு விடுத்தார். இத்தகைய பணிகள் கனிம மற்றும் ஆற்றல் வளங்களை அடையாளம் காணவும், பூகம்பம், எரிமலை வெடிப்புகள் போன்ற சுற்றுச்சூழல் பேரழிவுகளின் அபாயங்களை மதிப்பிடவும் உதவும் என சீனா நம்புகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த கோலா சூப்பர் டீப் போர்ஹோல் தான் பூமியில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான துளையாக உள்ளது. இந்தத் ஆழ்துளை 20 வருட துளையிடலுக்குப் பிறகு 1989ஆம் ஆண்டு 12,262 மீட்டர் (40,230 அடி) ஆழத்தை எட்டியது.
பாகிஸ்தான், நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கள்ளநோட்டுகள்!