அமெரிக்க முதுகில் அமர்ந்து சீறும் செத்த பாம்பு... மிரட்டும் முனீரின் தந்திரப் பின்னணி இதுதான்!

Published : Aug 11, 2025, 09:22 PM IST
Asim Munir and Donald Trump

சுருக்கம்

ஜெனரல் அயூப் முதல் ஜியா, முஷாரஃப் வரை பாகிஸ்தானின் மற்ற சர்வாதிகாரிகள் அமெரிக்கா தங்கள் உண்மையான நண்பர் என்று நினைத்தார்கள். ஆனால், அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுக்கு தனது வேறு முகத்தை மட்டுமே காட்டியுள்ளது.

அமெரிக்க மண்ணிலிருந்து அணு ஆயுதத் தாக்குதலை அச்சுறுத்தும் பாகிஸ்தான் ராணுவத் தலைமை மார்ஷல் ஜெனரல் அசிம் முனீரின் பேச்சு பரபரப்பை கிளப்பி உள்ளது. ஹிரோஷிமா மீதான அணு ஆயுதத் தாக்குதலின் ஆண்டு நிறைவையொட்டி, பாகிஸ்தானின் அணு ஆயுதங்களால் பாதி உலகத்தை அழிப்பதாக முனீர் மிரட்டியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத் தலைமை மார்ஷல் அசிம் முனீர் இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்து கொண்டு அவர் வாய்ச்சொல் வீரராக கொக்கரித்துள்ளார். அடிபட்ட பாகிஸ்தான் நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த மனிதராக பார்க்கப்படும் அவர் இந்தியாவுக்கு கடும் மிரட்டல் விடுத்துள்ளார். 

அமெரிக்க மண்ணிலிருந்து தனது அணு ஆயுதங்களால் இந்தியா உட்பட பாதி உலகத்தை அழிப்பதாகவும் முனீர் மிரட்டியுள்ளார். இதன் மூலம், பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் பொறுப்பற்ற நபர்களின் கைகளில் உள்ளன என்றும், அது இந்தியாவை மட்டுமல்ல, பாதி உலகத்தையும் தாக்க அச்சுறுத்துகிறது என்றும் முனீர் உலகிற்கு உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்த பாகிஸ்தானியர்களின் நிகழ்ச்சியில் முனீர், "நாங்கள் ஒரு அணுசக்தி நிறைந்த நாடு. நாம் மூழ்கி வருவதாக உணர்ந்தால், பாதி உலகத்தை அழித்துவிடுவோம்" என்று கூறினார். 1945 ஆம் ஆண்டு நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டை வீசிய 80 வது ஆண்டு நிறைவை உலகம் கொண்டாடும் நாளில் முனீர் அணு ஆயுதத் தாக்குதலை நடத்துவதாக மிரட்டியுள்ளார். ஹிரோஷிமா - நாகசாகியில் அமெரிக்கா நடத்திய அணு ஆயுதத் தாக்குதலில் சுமார் 1,70,000 பேர் கொல்லப்பட்டனர். ஆனாலும், அமெரிக்கா , முனீரில் இந்தப் பேச்சைப்பற்றி வாயே திறக்கவில்லை. அமைதியாக இருந்தது, ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில், அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாகிவிட்டன. பாகிஸ்தானின் சிவில் அரசுக்குப் பதிலாக, பாகிஸ்தான் இராணுவத்திற்கு, குறிப்பாக அசிம் முனீருக்கு டிரம்ப் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். ஜூன் மாதம் டிரம்ப், முனீரை வெள்ளை மாளிகையில் மதிய உணவிற்கு அழைத்திருந்தார். அங்கு பொதுவாக நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்.

 அப்போது, எண்ணெய் தொடர்பாக அமெரிக்காவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், முனீர் தனது ஆத்திரமூட்டும் பேச்சுக்கு அமெரிக்காவை ஒரு தளமாகத் தேர்ந்தெடுப்பது சிந்திக்கப்பட்ட உத்தியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது பாகிஸ்தானில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் செய்திகளாக மாற முனீர்க்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.

முனீரின் அச்சுறுத்தல்கள் ஆச்சரியமல்ல என்று இராஜதந்திர நிபுணர்கள் நம்புகிறார்கள். ஜெனரல் அயூப் முதல் ஜியா, முஷாரஃப் வரை பாகிஸ்தானின் மற்ற சர்வாதிகாரிகள் அமெரிக்கா தங்கள் உண்மையான நண்பர் என்று நினைத்தார்கள். ஆனால், அமெரிக்கா எப்போதும் பாகிஸ்தானுக்கு தனது வேறு முகத்தை மட்டுமே காட்டியுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, பாகிஸ்தான் ஒரு கைப்பாவையே தவிர வேறொன்றுமில்லை. இதற்கு மிகப்பெரிய உதாரணம் ஆப்கானிஸ்தான் போர். இதில் பாகிஸ்தான் ஈடுபட்டதற்காக அதிக விலை கொடுத்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!
இனி தேசிய நாணயங்களில் தான் வர்த்தகம்! டாலருக்கு சவால் விடும் புடின்!