உலகச் சண்டியர் அமெரிக்கா கொடுத்த தாட்டியம்... இந்தியாவுக்கு பகிரங்க மிரட்டல்... கொக்கரிக்கும் பாகிஸ்தான்..!

Published : Aug 11, 2025, 04:30 PM IST
Pakistan

சுருக்கம்

முந்திரிக் கொட்டை முனீர் ஏன் இந்தியாவுக்கு எதிராக நேரடி அணு ஆயுதப் போர் நடத்தப்படும் என்று அமெரிக்காவில் அமர்ந்து பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தில் இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது.

உலகச் சண்டியராக மிரட்டும் அமெரிக்காவின் புளோரிடா மாகாநத்தில் உடகார்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டிய பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் கொக்கரிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது பாகிஸ்தான் -இண்நியாவின் சூழல் அமைதியாக இருந்து வரும் நேரத்தில் முந்திரிக் கொட்டை முனீர் ஏன் இந்தியாவுக்கு எதிராக நேரடி அணு ஆயுதப் போர் நடத்தப்படும் என்று அமெரிக்காவில் அமர்ந்து பேசுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தில் இருக்கும் என்கிற கேள்வி எழுகிறது. அதுவும் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு...

நாகசாகி அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, பாகிஸ்தானிடம் 160 அணு ஆயுதங்களும், இந்தியாவில் 180 அணு ஆயுதங்களும் உள்ளன.

முனீர் ஏன் அச்சுறுத்துகிறார்?

அசீம் முனீரின் கண்மூடித்தனமான, பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கள் பாகிஸ்தானின் அணு ஆயுதப் பரவல் வரலாற்றின் பின்னணியை பார்க்க வேண்டும். பாகிஸ்தான் அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கானின் வலையமைப்பு லிபியா, ஈரான் மற்றும் வட கொரியாவுடன் அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்து கொண்டன.

பாகிஸ்தான் அவ்வப்போது அணு ஆயுதங்களை காட்டி மிரட்டி வருகிறது. அதே நேரத்தில் தன்னை ஒரு பொறுப்பான அணுசக்தி சக்தியாக உலகிற்கு முன் காட்டிக்கொள்ள தவறான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

தெற்காசியாவில் அணுசக்தி உறுதியற்ற தன்மைக்கான உண்மையான ஆதாரம் அங்கு முடிவெடுக்கப்படுவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிவில் அரசாங்கத்தின் கைகளில் இல்லை. பாகிஸ்தானின் கையில் அணுசக்தி பொத்தானை வைத்திருக்கும் இராணுவம் என்பதை முனீரின் அச்சுறுத்தல் காட்டுகிறது. முனீர் இப்படி ஆத்திரமூட்டும் பேச காரணம் இதுதான்.

அணுசக்தி மோதலைத் தடுப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை பேசி வந்தபோதும், அமெரிக்க மண்ணில் இருந்து முனீரின் இத்தகைய பொறுப்பற்ற, ஆத்திரமூட்டும் பேச்சுக்களுக்கு அமெரிக்கா பாகிஸ்தானை பொறுப்பேற்கச் செய்யுமா?

பஹல்காமுக்கு முன், இந்துக்களும், முஸ்லிம்களும் ஒன்றாக வாழ முடியாது என்று முனீர் சர்ச்சையாகப் பேசி இருந்தார். அதன் பிறகு, பஹல்காமில் ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. அங்கு இந்திய மக்களிடம் அவர்களின் மதம் குறித்து கேட்கப்பட்டு, மிக அருகில் இருந்து சுடப்பட்டது. முனீரின் தற்போதைய பேச்சு எதிர்காலத்தில் மேலும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. இந்த சாக்கில் பாகிஸ்தான் அதன் ஏவுகணை, அணுசக்தித் திறனை சுட்டிக்காட்டுகிறது.

பாகிஸ்தான் ஒரு பொறுப்பற்ற அணு ஆயுத நாடு என்பதை அவரது பேச்சு தெளிவாகக் காட்டுகிறது. உண்மையான ஆபத்து என்னவென்றால், இந்த ஆயுதங்கள் ஒரு நாள் அரசு சாராதவர்களின் கைகளுக்கு மாறக்கூடும்.

முனீரின் இந்தப்பேச்சு பாகிஸ்தானின் பழைய பாணியின் ஒரு பகுதி. அமெரிக்கா, பாகிஸ்தான் இராணுவத்தை ஆதரிக்கும் போதெல்லாம், நமது எதிரி நாட்டின் உண்மையான ஆக்கிரமிப்பு முகத்தைக் காட்டத் தொடங்குகிறது.

⁠பாகிஸ்தானில் ஜனநாயகம் என்ற ஒன்று இல்லை என்பதற்கு இதுவும் சான்று. இராணுவமே அங்கு உண்மையான சக்தி. அமெரிக்காவின் அன்பான வரவேற்பால் ஊக்கமளிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக பாகிஸ்தானில் அமைதியான, வெளிப்படையான ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறலாம். அதில், பீல்ட் மார்ஷல் பாகிஸ்தானின் ஜனாதிபதி நாற்காலியை ஏற்றுக்கொள்வார். இது பாகிஸ்தானில் நீண்ட காலமாக விவாதிக்கப்படுகிறது.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?
இம்ரான் கான் ஒரு பைத்தியக்காரன்..! பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!