வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தது என இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் , வுஹான் ஆய்வுக்கூடம் எவ்வளவு பாதுகாப்பானது என்பது குறித்து விளக்கும் வகையில் சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது .
வுஹான் ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்தது என இங்கிலாந்து நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்த நிலையில் , வுஹான் ஆய்வுக்கூடம் எவ்வளவு பாதுகாப்பானது என்பது குறித்து விளக்கும் வகையில் சீனா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது . இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது . இதுவரையில் இந்த வைரஸ் 25 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது . இதுவரையில் ஒரு லட்சத்தி 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் . இந்த வைரஸ் சீனாவின் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிந்து இருக்கக் கூடுமென அமெரிக்கா , பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் எழுப்பி வருகின்றன . இந்நிலையில் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்த வைரஸ் பரவி உள்ளது என்பது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இங்கிலாந்து நாளிதழான " சன் " ஆதாரமாக சில தரவுகளை மேற்கோள் காட்டி உள்ளது
,
அதாவது கடந்த மாதம் சீன அரசுக்கு சொந்தமான செய்தி இணையதள பக்கத்தில் வுஹான் இன்ஸ்டியூட் ஆப் வைராலஜி ஆய்வு கூடத்தில் சீல் வைக்கப்பட்ட ஃப்ரீசர் உடைக்கப்பட்டு கிடந்ததற்கான புகைப் படங்களும் , அந்த ஆய்வுக்கூடத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட அருவருப்பான கொடிய நோய்க்கிருமிகள் ஆராய்ச்சி செய்வதற்கான புகைப்படங்களும் , கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல கொடிய வைரஸ்களை சேமித்து வைத்திருப்பதற்கான வைரஸ் வங்கி புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஆனால் அது ஒரு சில மணி நேரங்களிலேயே அவைகள் நீக்கப்பட்டுவிட்டன , எனவே அங்கு மோசமான கிருமிகள் பாதுகாப்பற்ற முறையில் ஆராயப்பட்டுவருவது தெரியவருகிறது என இங்கிலாந்தின் சன் நாளிதழ் குற்றஞ்சாட்டியது. அதுமட்டுமின்றி அந்த ஆய்வுக்கூடத்தில் ஒரே நேரத்தில் 24 விஞ்ஞானிகள் பணியாற்ற முடியும் என்றும் , அதில் முக்கிய மூன்று அறைகள் உள்ளன என்றும், விலங்குகளை சேமித்து வைப்பதற்காக இரண்டு அறைகளும் , மோசமான மிகக் கொடிய வைரஸ்களை சேமிக்கும் வைரஸ் வங்கி ஆகியவற்றிர்காக ஒரு அறை என அந்த ஆய்வகம் செயல்பட்டு வருகிறது என சன் அதிர்ச்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வுஹான் ஆய்வுக்கூடமே கொரோனாவின் பிறப்பிடமாக இருக்கலாமென பல நாடுகள் சந்தேகப்பட்டு வரும் நிலையில் , வுஹான் ஆய்வுக்கூடம் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது குறித்து விளக்கும் வகையில் சீன அரசு ஊடகமான சிசிடிவி தொலைக்காட்சி ஒரு சில விநாடிகள் ஒடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதமே வெளியிடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, அந்த ஆய்வு கூடத்திற்குள் நுழையும் 2 விஞ்ஞானிகள் பாதுகாப்பு உடைகளை அணிந்து ஆய்வு கூடத்தில் மாதிரிகள் சோதனை செய்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன . அவர்களில் ஒருவரான ஜாங் ஹுவாஜூன் மற்றும் அவரின் சக ஊழியரும் எவ்வாறு பாதுகாப்பு கவசங்களை அணிகின்றனர் என்பதையும் , ஆய்வகத்தின் முக்கிய பகுதிக்குள் நுழைவதற்கு முன்பு 5 ஹெர்மெடிக் சீல் அறைகளை கடந்து செல்வதையும் அந்த காட்சிகள் காட்டுகின்றன . இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வுஹான் ஆய்வுக்கூடத்தில் மீது வைத்துள்ள குற்றச்சாட்டை முற்றிலுமாக இந்த ஆய்வுக்கூடத்தின் தலைவர் யுவான் ஜிமிங் மறுத்துள்ளார்.
இந்நிலையில் சன் நாளிதழ் வைத்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள அவர், எங்களுக்கு எதிராக வரும் இது போன்று பல புரட்டு கதைகளை கேட்டு எங்களுக்கு சலித்துவிட்டது என தெரிவித்துள்ளார் . இந்த வைரஸ் எங்கள் ஆய்வுக் கூடத்திலிருந்து கசிவதற்கு எந்த வழியும் இல்லை என மறுத்துள்ளார். கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வுக்கூடத்தில் இருந்தும் சீனாவில் இதேபோன்று இயங்கிவரும் மற்றொரு ஆய்வு கூடத்தில் இருந்து வந்ததாக பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் யுவான் இதை மறுத்துள்ளார். உலகம் இந்த வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடூரமான சூழ்நிலையை நாங்கள் முழுமையாக ஆராய்கிறோம் என்று அவர் கூறியுள்ளார் . அதுமட்டுமின்றி இந்த வைரஸ் செயற்கையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் யுவான் நிராகரித்துள்ளார். அமெரிக்கா ஆய்வுக்கூடத்தில் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு எந்த அறிவியல் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் அது சொல்லப்படுகிறது. மக்களை குழப்பம் அடையச் செய்யவும் , சீனாவின் தொற்றுநோய் விவகாரத்திலும் அல்லது சீனாவின் அறிவியல் நடவடிக்கைகளிலும் தலையிடுவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது என குற்றம்சாட்டியுள்ளார்
.
இந்நிலையில் வுஹான் ஆய்வுகூடம் குறித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ள யுவான், ஆய்வுக்கூடம் கடந்த 2018-ஆம் ஆண்டில் சுமார் 42 மில்லியன் டாலர் செலவில் திறக்கப்பட்டதாகும், இது முற்றிலும் பாதுகாக்கப்பட்ட ஆய்வுக்கூடம் என்பது மட்டுமல்லாமல் எந்தவிதமான கிருமிகளும் வெளியில் கசியாத அளவிற்கு கசிவுகளை தடுக்கும் தொழில்நுட்ப அடிப்படையில் ஆய்வகம் வடிவமைக்கப்பட்டுள்ளது . இந்த ஆய்வுக் கூடம் வெளியிலிருந்து காற்று உள்ளே வர மட்டுமே அனுமதிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார் . செய்தித்தாள்கள் மேற்கோள்காட்டியபடி இந்த ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ்கள் ஆய்வு செய்வதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இதுவரை தங்கள் ஊழியர்கள் யாரும் அதனால் பாதிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார் .