உலக அளவில் 25 லட்சம் பேருக்கு பரவியது கொரோனா..!! மீள முடியாமல் திணறும் ஐரோப்பிய நாடுகள்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2020, 6:19 PM IST
Highlights

இதே நேரத்தில் தங்கள் நாட்டில்  கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறி சில நாடுகள்  ஊரடங்கை தளர்த்த போவதாகவும் அறிவித்துள்ளன.

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டி உள்ளது . இது ஒட்டு மொத்த உலக நாடுகளையும் கதிகலங்க செய்துள்ளது .   சில நாடுகள் ஊரடங்கை தளர்த்தி வரும் நிலையில் இந்த எண்ணிக்கை பல நாடுகளையும் பதற்றமடைய வைத்துள்ளது .  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சீனாவில்  ஹூபே மாகாணம், வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இரண்டு மாதத்திற்கும் மேலாக சீனாவை கடுமையாக வாட்டி வதைத்தது ,  பின்னர் அங்கிருந்து அமெரிக்கா ,  ஐரோப்பா , ஆப்பிரிக்கா என ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த கண்டங்களையும் தாக்கியது .  கிட்டத்தட்ட அதில் 120க்கும் மேற்பட்ட நாடுகளை கொரோனா பீடித்தது .  ஆரம்பத்தில் இந்த வைரஸ் மிக மெதுவாக பரவி வந்த நிலையில் தற்போது உலக அளவில் இது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது ,  இதுவரை இந்த வைரசுக்கு அமெரிக்கா ,  இத்தாலி ,  ஸ்பெயின் ,  பிரான்ஸ்  , ஜெர்மனி  ,  பிரிட்டன் ,  துருக்கி , உள்ளிட்ட நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இதுவரை இந்த வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 71 ஆயிரத்து தாண்டியுள்ளது

எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு இந்த வைரசுக்கு அமெரிக்காவே மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  இதுவரையில் அமெரிக்காவில் 7 லட்சத்து 92 ஆயிரத்து 938 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  சுமார் 42 ஆயிரத்து 518 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் ,  அதற்க்கு அடுத்த நிலையிலுள்ள ஸ்பெயினில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 178 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் , சுமார் 21 ஆயிரத்து 882 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் .  இத்தாலியில்  1 லட்சத்து 81 ஆயிரத்து 828 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ,  அங்கு 24 ஆயிரத்து 114 பேர் உயிரிழந்துள்ளனர் .  அதேபோல் பிரான்சில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது , இதுவரை  20 ஆயிரத்து 265 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் . ஜெர்மனியில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 65 பேருக்கு கொரான தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  ஆனால் அங்கு வெறும் 4,362 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்

பிரிட்டனில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  16 , 609 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர் .  துருக்கியில்  90 ஆயிரத்து 980 பேரும் ,  ஈரானில் 84 ஆயிரத்து 802 பேரும் ,  சீனாவில் 82 ஆயிரத்து 758 பேரும் , ரஷ்யாவின் 52 , 763 பேரும்,  பெல்ஜியம் மற்றும் பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் தலா 40 ஆயிரம் பேரும்,  கனடா , நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தலா 36 ஆயிரம் பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் .  அதற்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவில் 18 ,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .  இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களில் வைரஸ் தொற்று  பன் மடங்காக உயர்ந்துள்ளது இந்நிலையில் இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 692 ஆக உயர்ந்துள்ளது . இதனால் உலக கொரோனா பாதிப்பு பட்டியலில் இந்தியா 15 வது இடத்துக்கு முன்னேரி உள்ளது.  இதே நேரத்தில் தங்கள் நாட்டில்  கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறி சில நாடுகள்  ஊரடங்கை தளர்த்த போவதாகவும் அறிவித்துள்ளன. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள உலக சுகாதார  நிறுவனம் கொரோனாவில் தாக்கம் இதற்கு மேல் தான் ஆரம்பிக்கப் போகிறது , எனவே தற்போது உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவை தளர்த்த முயல்வது  பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடும் எனவே  ஊரடங்கு தளர்த்துவதில் அவசரம் காட்டக்கூடாது .  நிதானமாக இதை கையாள வேண்டும் என எச்சரித்துள்ளது  .  இந்நிலையில் ஊரடங்கு தளர்த்திய ஒரு சில நாட்களிலேயே ஸ்பெயினில் கிட்டத்தட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது .  இது ஊரடங்கை தளர்த்தியள்ள மற்ற நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது .  உலக நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்து வரும் போதிலும் இந்த வைரசின்  வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை . இந்நிலையில்  உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு சில வாரங்களில் பன்மடங்காக உயர்ந்ததின் காரணமாக  24 , 98, 480 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!