கொரனாவுக்கான உயிர் பலி 1.70 லட்டத்தை தாண்டியது..!! ஐரோப்பா கண்டத்தில் அதிக பேர் மரணம்..!!

By Ezhilarasan BabuFirst Published Apr 21, 2020, 5:04 PM IST
Highlights

ஆனாலும் கொரொனா தொற்று  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இன்னும் பலர் இந்த வைரசால் பாதிக்கவும் , உயிரிழக்கவும் கூடும் என அஞ்சப்படுகிறது .  

உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது, இந்த தகவல் உலக மக்களை மிகவும் கலக்கமடைய வைத்துள்ளது. உலக அளவில்  ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்பில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஐரோப்பாவை சேர்ந்தவர்கள் ஆவர்.   ஐரோப்பாவில் மட்டும் ஒரு லட்சத்தி 1737 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில்  தோன்றிய கொரோனா வைரஸ் 2 மாதத்துக்கு மேலாக சீனாவை கடுமையாக வாட்டி வதைத்தது .  பின்னர் அங்கிருந்து அமெரிக்கா ஐரோப்பா ஆப்பிரிக்க என ஒரே நேரத்தில் ஒட்டுமொத்த கண்டத்தையும் தாக்கியது .  இதில் கிட்டத்தட்ட 120 க்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனாவில்  பிடித்துள்ளன.  உலக அளவில் 20.50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதில்  ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 333 பேர் உயிரிழந்துள்ளனர் .  இந்நிலையில் இத்தாலி ,  ஸ்பெயின், பிரான்ஸ் , ஜெர்மனி , அமெரிக்கா , பிரிட்டன் , துருக்கி  உள்ளிட்ட  நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன .  ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மட்டும்  கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 737 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.   இதில் அமெரிக்காவில் மட்டும் 42 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளனர் .  இதுவரையில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது இத்தாலியில் மட்டும் 24 ஆயிரத்து 114 பேர் உயிரிழந்துள்ளனர் .  ஸ்பெயினில் 21, 282  பேரும் பிரான்சில் 20 ஆயிரத்து  165 பேரும் உயிரிழந்துள்ளனர் .   

பிரிட்டனில் 16 , 509  பேர் உயிரிழந்தனர் .  வைரசில்  அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே கணக்கிட படுவதாகவும் இன்னும் மக்கள் மத்தியில் பரிசோதனை விகிதத்தை அதிகப்படுத்த வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் 13 ஆயிரத்து 959 பேரும்,  ஸ்பெயினில் 7,705 பேரும்,  பிரான்சில் 5 ஆயிரத்து 653 பேரும்   தொடர்ந்து அவசர சிகிச்சைப் பிரிவில் , அதாவது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்நிலையில் இன்னும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என தெரிகிறது.   ஸ்பெயின் ,  இத்தாலி ,  பிரான்ஸ் , ஜெர்மனி , அமெரிக்கா ஆகிய நாடுகளையும் கடந்து ஈரானில் 5 ஆயிரத்து 297பேரும் , சீனாவில் 4,632 பேரும் ,  பெல்ஜியத்தில் 5 ஆயிரத்து 998 பேரும் ,  நெதர்லாந்தில் 1751 பெரும் உலக அளவில் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர் . 

ஆனாலும் கொரொனா தொற்று  தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் இன்னும் பலர் இந்த வைரசால் பாதிக்கவும் , உயிரிழக்கவும் கூடும் என அஞ்சப்படுகிறது .  அதுமட்டுமில்லாமல் பல உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஊரடங்கை தளர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.  இதனால் மீண்டும் அந்நாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக வாய்ப்புள்ளது எனவும் , எனவே ஊரடங்கை தளர்த்துவதில் நிதானமாக இருக்க வேண்டும் என்றும் அதை மிகவும் கவனமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்  உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது .  கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்த்திய ஸ்பெயினில் கிட்டதட்ட 5 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது . 
 

click me!