வடகொரிய அதிபர் உடல்நிலையில் முன்னேற்றம்... கொரோனா பீதியிலும் கண்கொத்தி பாம்பாக கவனிக்கும் டிரம்ப்..!

By vinoth kumar  |  First Published Apr 21, 2020, 10:44 AM IST

வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை, தென் கொரிய ஊடகங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளது. 


வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலை, தென் கொரிய ஊடங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.  

உலகமே கொரோனா வைரஸ் குறித்து பீதியில் இருந்த நிலையில் வடகொரியாவில் கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்று கூறி அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தி கிம் ஜாங் உன் உலக நாடுகளை மிரட்டி வந்தவர். இந்நிலையில், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை  சிகிச்சைக்குப் பின் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. புகைப்பிடித்தல், உடல் பருமன், அதிக வேலைப்பளு காரணமாக இதய நோயால் கிம் ஜாங் உன் பாதிக்கப்பட்டதாகவும், இதற்காக அவர் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இந்த அறுவை சிகிச்சைப்பிறகு அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos

மேலும், ஏப்ரல் 15ம் தேதி கிம் ஜாங் உன் தாத்தாவின் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் கிம் கலந்து கொள்ளவில்லை. 4 நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். கிம்மின் உடல் நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக வந்து இருக்கும் செய்தி உண்மையானதுதான் என்று கூறப்பட்டு வந்தது. 

இந்நிலையில், வடகொரிய விவகாரங்களை உன்னிப்பாக கவனிக்கும் தென்கொரிய இணைய பத்திரிகையான டெய்லி என்.கே., ஏப்ரல் 12ம் தேதி கிம் ஜாங் உன்னிற்கு இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக கூறியுள்ளது. அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாககிம் ஜான் உன்னின் இதய பாதிப்பு ஏற்பட்டது. தற்போது ஹியாங்சன் கவுண்டியில் உள்ள ஒரு வில்லாவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,  அவரது உடல்நிலையை பரிசோதித்த  மருத்துவர்கள் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததாக கூறவே, நேற்று முன்தினம் பியோங்யாங் திரும்பியதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பீதியில் அமெரிக்கா இருந்தாலும் வடகொரிய அதிபர் விவகாரத்தில் அதிபர் கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறார். 

click me!