கொரோனா வைரஸை யார் பரப்பியது..? இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய உலக நாடுகள் பெரும்பாலானவை கோரிக்கை விடுத்து வந்தன.
கொரோனா வைரஸை யார் பரப்பியது..? இதன் பின்னணி என்ன என்பது குறித்து ஆராய உலக நாடுகள் பெரும்பாலானவை கோரிக்கை விடுத்து வந்தன.
இந்நிலையில் கொரோனா இயற்கையாக உருவான வைரஸ்தான் என உலக சுகாதார நிறுவனம் மீண்டும் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் அவசரநிலைப் பிரிவின் தலைவரான மிஷெல் ரயான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தேகம் எழுப்புவது குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயான், பல விஞ்ஞானிகளின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், கொரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் இயற்கையாக உருவானது எனவும், உறுதி செய்துள்ளதாக கூறினார்.
வைரசின் தன்மை குறித்து அறிந்து கொள்ளவும், எதிர்காலத்தில் மீண்டும் பெருந்தொற்று ஏற்டாமல் தவிர்க்கவும் அது உருவான விதம் குறித்த சரியான புரிதல் அவசியம் என்றும் ரயான் கூறினார்.